எமது பிராண்டிக்ஸ் குடும்பம் திறமையான மற்றும் இதயத்தால் செல்வந்த மக்களினால் ஆனது. அதனால்தான் நாம் மற்றவர்களிடையே தனித்துவமானவர்களாக திகழ்கின்றோம். பிராண்டிக்ஸின் மதிப்புகளால் மற்றும் தனித்துவத்தால் உருவாகியுள்ள நாம் எப்போதும் ஏனையவர்களுக்கு மகிழ்ச்சியாக உதவ வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயல்படுகிறோம். வெலிசர பிராண்டிக்ஸ் குழுமத்தில் பணிபுரியும் எம்.டி.நலீன் பிரியந்த, 2005 இல் பிராண்டிக்ஸில் இணைந்தார். நலீன் இதயத்தில் மிகவும் செல்வந்தரான பிராண்டிக்ஸ் உறுப்பினர் ஆவார். 2015 முதல் 2020 வரை ஒவ்வொரு ஆண்டும் பிராண்டிக்ஸ் இரத்த தானம் திட்டத்தின் மூலம் தொடர்ந்து இரத்த தானம் செய்த பிராண்டிக்ஸின் புகழ்பெற்ற உறுப்பினரும் ஆவார். எமது உடலில் ஓடும் ஒரு துளி இரத்தம் இன்னோர் உயிரை காப்பாற்ற உதவும் என்றல், அது எவ்வளவு ஒரு உன்னதமான விடயம்? எனவே இந்த தொண்டு செயலை ஆண்டுதோறும் செய்பவர் நலீன். ஆண்டுதோறும் இரத்த தானம் செய்வதன் மூலம் அவர் ஆத்ம திருப்தியை எதிர்பார்க்கிறார். தனது வேலைகளை உற்சாகத்துடன் நிறைவேற்றும் அவரின் ஒரே எதிர்பார்ப்பு நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தன்னால் முடிந்த அளவு இரத்த தானம் செய்வதாகும்.
மருந்துகளால் மட்டும் குணப்படுத்த முடியாத நோயாளிகளுக்கு பொதுவாக இரத்தமாற்றம் தேவைப்படுகிறது. அத்தகைய நபர்கள் பெரும்பாலும் வாழ்க்கை மற்றும் மரணம் இரண்டிற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், நோயாளியின் உறவினர்களும் அத்தகைய சூழ்நிலையில் மிகவும் உதவியற்றவர்களாக மாறுகிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்ட பலருக்கு, மகிழ்ச்சியையும் வாழ்க்கையையும் நிச்சயமாக நலினால் கொடுத்திருக்க முடியும்! இந்த உலகில் செய்யக்கூடிய தொண்டு செயல்களில் உன்னதமான ஒன்று, எனது உடல் பாகங்களை தானம் செய்வது. இரத்த தானமும் இந்த வகையைச் சார்ந்ததாகும். இந்த வழியில் நலீனின் உடலில் உற்பத்தி செய்யப்படும் இரத்தம் பல அப்பாவி நோயுற்ற உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளது. இதுபோன்ற உன்னதமான உறுப்பினர்களைப் பற்றி நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். இறுதியாக, நலீனுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற நாங்கள் முழுமனதுடன் பிரார்த்திக்கின்றோம்.