பசுமை நிலைத்தன்மையினால் உலகை வென்று தேசத்திற்கு நாம் வழங்கிய பரிசு

பசுமை நிலைத்தன்மையினால் உலகை வென்று தேசத்திற்கு நாம் வழங்கிய பரிசு

இது ஆகஸ்ட் 2008 இல் ஒரு நாள். நாம் பிராண்டிக்ஸ் குடும்ப உறுப்பினர்களாகவும், இலங்கையர்களாகவும், உலகம் முழுவதிலும் பெருமை கொள்ள முடிந்த நாள் அது. ஏனென்றால், ஐக்கிய அமெரிக்காவின் பசுமை கட்டிட கவுன்சிலின், பசுமை கட்டிட மதிப்பீட்டு அமைப்பிலிருந்து லீட் பிளாட்டினம் விருதை பெற்ற உலகின் முதல் ஆடைத் தொழிற்சாலையாக எமது சீதுவ பசுமை தொழிற்சாலை அங்கீகரிக்கப்பட்டிருந்தமையினால் ஆகும். சுற்றுச்சூழலை எப்போதும் அன்புடன் பராமரிக்கும் பிராண்டிக்ஸ் குடும்பத்தின் அர்ப்பணிப்பு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

நாம் அனைவரும் அன்பாக சீதுவ பசுமை தொழிற்சாலை என்று அழைக்கும் தொழிற்சாலை இப்போது மற்றுமொரு பாரிய சமூக சேவைக்கு தயாராகி உள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக, கண்ணுக்குத் தெரியாத எதிரி கோவிட் -19 உலகம் முழுவதையும் கைப்பற்றியுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம். அதே நேரத்தில், முழு உலகின் பொருளாதாரமும் சரிந்டுள்ளது. மூன்றாம் உலகில் ஒரு சிறிய நாடு என்ற வகையில், இலங்கையர்களாகிய எமக்கு இது மிகப்பெரிய அடியாகும். நாட்டின் மிகப்பெரிய அந்நிய செலாவணி உற்பத்தியாளராகிய பிராண்டிக்ஸ் குடும்பத்திற்கும், இலங்கையின் ஒட்டுமொத்த  பொருளாதாரத்திற்கும் ஆழமான தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுபோன்ற நெருக்கடியான சூழலின் மத்தியிலும், எமது சமுதாயத்துக்காகவும் நாட்டிற்காகவும் நாங்கள் எமது கடமையைச் செவ்வனே செய்கிறோம். முதல் கோவிட் அலையுடன் எழுந்த சிகிச்சை மையப் பிரச்சினைக்கு தீர்வாக, எங்கள் பூனானி தொழிற்சாலையை கோவிட் சிகிச்சை மையமாக மாற்றியமைத்து வழங்கியிருந்தோம். அதேசமயம் நாம் இரம்புக்கனவில் உள்ள தொழிற்சாலையையும் கோவிட் சிகிச்சை மையத்திற்கு நன்கொடையாக அளித்தோம். இன்று, எமது குழுமத்தினால் வழங்கப்படும் மூன்றாவது தொழிற்சாலை வளாகத்தையும் கோவிட் சிகிச்சை மையமாக மக்கள்மயமாக்க முடிந்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள சீதுவ பசுமை தொழிற்சாலையே இலங்கை ராணுவத்துடன் இணைந்து இலங்கையில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரு வாரம் எனும் மிகக் குறுகிய காலத்தில் அவசர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்தும் பிரிவு, மறுவாழ்வளிக்கும் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார வசதிகளும் உள்ள மருத்துவமனையாக  அமைக்கப்பட்டுள்ளதாகும். அதேபோன்று இங்கு 1,200 படுக்கைகள் உள்ளன. உலகிற்கு முன்னோடியாக திகழ்ந்து பசுமை தொழிற்சாலையாக செயல்பட்ட இதில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையிலும், சூரிய சக்தி, காற்றுச்சீரமைப்பி (Air Condition) உள்ளிட்ட அனைத்து சூழலுக்கு ஏற்ற  அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பிராண்டிக்ஸ் குடும்பத்தின் உறுப்பினர்களாக, ஒரு சமகால சமூகத் தேவைக்கு மிகவும் பொருத்தமான தீர்வை முன்வைக்க எம்மால் முடிந்தமையை குறித்து நாம் பெருமையுடன் மகிழ்கின்றோம். 

பிராண்டிக்ஸின் விழித்தெழுந்த மக்களாக ஈர்க்கப்பட்ட தீர்வுகளை  முன்வைப்பதே எங்கள் ஒரே நோக்கமாகும்.  பிராண்டிக்ஸ் நாம் முன்வருவது மரியாதை, நேர்மை, குழு உணர்வு மற்றும் தனிச்சிறப்பு போன்ற எம்முள் இருக்கின்ற மதிப்புகளினாலேயே ஆகும். அந்த மதிப்புகள் மூலம் விழித்தெழுந்த நாம் ஈர்க்கப்படும் தீர்வுகளை உலகுக்கு முன்வைக்கிறோம். விழித்தெழுந்த அந்த தீர்வுகளினாலேயே நாம் வெற்றியடைகின்றோம். நம் அடைந்த இந்த சாதனைகள் மற்றவர்களையம் விழித்ததெழச்செய்வதுடன், பசுமை நிலைத்தன்மையுடனும், நாட்டிற்கான அன்புடனும் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அதுதான் பிராண்டிக்ஸின் தனித்துவமாகும்.

இது எனது தனித்துவத்தின் ஒரு எடுத்துக்காட்டாகும்.

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *