ஆர். ஜே. கே. கருணானந்த அல்லது ரணதுங்க கருணானந்த தடகளத் துறையில் இலங்கை இராணுவத்தில் மிகவும் திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவர். 1957 ஆம் ஆண்டில் அவர் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 5000 மீட்டரில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பின்னர் அவர் 1962 இல் அதே போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கடுமையாகப் பயிற்சி செய்த பிறகு, அவர் 1963 இல் 5000 மீ., 15 நிமிடங்கள் 18.2 வினாடிகளில் முடித்து தேசிய பட்டத்தை வென்றார்.
இலங்கை இராணுவத்தின் 1 வது படைப்பிரிவில் படைத்துறை அலுவலராக பணியாற்றிய போது கருணானந்த இந்த வெற்றியை அடைய முடிந்தது.
அதே ஆண்டு பாதுகாப்புச் சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவர் 5,000 மீட்டர் போட்டியில் 14 நிமிடங்கள் 56.8 வினாடிகளில் வென்று, புதிய இலங்கை சாதனையைப் படைத்து, 15 நிமிடங்கள் 2.0 வினாடிகளில் இருந்த சாதனையை முறியடித்தார்.
அவர் இராணுவ 10,000 மீட்டர் ஓட்டப் போர்ட்டியினை 25 நிமிடங்கள் 0.2 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து வென்றார். அவரது இந்த திறமையின் காரணமாக, கருணானந்த 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கை அணியில் சேர்ந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 10,000 மீட்டரில் 34 நிமிடங்கள் 21.6 வினாடிகளில் 29 வது இடத்தைப் பிடித்தார். போட்டியின் முடிவில், அவர் கடைசி மூன்று சுற்றுகளை தனியாக ஓடி முடித்தார். பார்வையாளர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து அவருடைய தைரியத்திற்காக பாராட்டினார்கள்.
இலங்கையின் தடகள சாம்பியன் டோக்கியோ ஒலிம்பிக்கின் கதாநாயகன் ஆனார், ஏனெனில் ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோளான வெற்றியைக் காட்டிலும் பங்கேற்பே முக்கியம் என்பதைக் எடுத்துக்காட்டாக நிறைவேற்றியமையினால்.
ஊக்கமளிக்கும் இலங்கையராக சர்வதேச அரங்கில் முன்மாதிரியாக இருந்த இந்த சிறந்த தடகள சாம்பியன், 1974 டிசம்பரில் தனது 38 வயதில் அம்பாறையில் நடந்த விபத்தில் சிக்கி இவ் உலகை நீத்தார்.