முகமூடிக்குள் முடங்கிய
மூன்றாண்டு காலமதில்
முனகிப் போனது – நம்
முழு வாழ்க்கையும்
தெரியாத வைரஸ் ஒன்றில்
தொலைந்த நம் பொக்கிஷங்கள்
தேடியும் கிடைக்காத
தொலைவுக்குள் போனதுவோ …..
கொத்துக் கொத்தாய் உயிர்கள்
தொலைக்கப்பட்டு போனதனால்
இல்லாத சோகமதை
பகிர முடியாத தனிமைகளில்
தவியாய் தவிக்கின்றோம்
ஒன்றிணைந்த உறவுகள்
ஒவ்வொன்றாய் போகையிலே ..
ஒற்றை மனிதனையேனும்
ஓரளவு காப்பாற்றவென
வீட்டுக்குள் தனித்திருப்போம்
என்றும் விழித்திருப்போம்
என்றோ ஓர் நாளில்
எல்லாமே சரியாகுமெனில்
நிச்சயமாய் பார்த்திருப்போம்
முழுமையான புது உலகை நோக்கி ….’
பு. டில்சன்
மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் நிறுவனம்
சிறந்த ஆக்கங்களுக்காக பரிந்துரைக்கப்படுகின்றது