தண்ணீர் உனக்குத்
தயவே இல்லையென்று
கண்ணீர் உகுந்தபடி
கதறிடும் மக்கள் கூட்டம் !
அப்பாதமாய் நீ
அடித்து நொறுக்குவதை
வெள்ளமென்றே மனிதர்
வெறுத்தே ஒதுக்கிடுவர் !
கோடையிலே நீ
கொஞ்சமும் இரக்கமின்றி
பூமிக்குள் ஒளிந்து நீ
புரட்டுகிறாய் மக்களையே !
எல்லோர்க்கும் எளியவனாய்
எப்பொழுதும் நீ இருந்திட்டாய்
தெய்வமாய் என்றுமுன்னை
சீராட்டியே மகிழ்ந்திடுவோம்
K .அபிநயன்