தினம் தினம் பெறும் வாழ்த்துக்களுடன் - விழித்தெழுந்த தீர்வுகளுடன் - இதயத்தோடு இணைந்த வெலிசர

1,500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பிராண்டிக்ஸ் வெலிசர ஆடைத் துறைக்கு பெரும் பங்களிப்பினை வழங்கி முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாகும். குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிராண்டிக்ஸ் வெலிசர தற்பொழுது பெரும் விருட்சமாக வளர்ந்து அதன் திறனை விரிவுபடுத்தி இருக்கிறது.
 
ஆரம்பத்தில் சீதுவ பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் வெலிசர பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டு. தற்போது சமூகத்திற்கும் சேவையாற்றி வெற்றிகரமாக நிறுவனத்தின் செயல்பாடுகளை  நடத்தி வருகின்றது.
 
நிறுவனத்தின் உறுப்பினர்களின் நல்வாழ்வுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கைக்கும், அவர்களின் குழந்தைகளுக்கு ஆதரவளித்து கல்வி கற்பதற்கு உதவுவதன் மூலம் அவர்களின் நல்வாழ்வுக்கு பெரும் உதவியாக உள்ளது. CSR திட்டங்களின் மூலம், நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு தண்ணீர் மற்றும் வீடுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை தரம் உயர்த்த முடிந்துள்ளது.
 
பிராண்டிக்ஸ் குழுமம் சமூக மேம்பாட்டு செயல்திட்டங்களை செயற்படுத்துவதில் முன்னணியில் திகழும் ஒரு நிறுவன கூட்டமாகும்.   பிராண்டிக்ஸ் வெலிசர நிறுவனமும் இதற்க்கு ஒத்ததாக,  ராகம வைத்தியசாலை, வெலிசர வைத்தியசாலை மற்றும் எலபிட்டிய சந்திரலங்கா பாடசாலை ஆகியவற்றிற்கும் பெரும் சேவையை ஆற்றியுள்ளது. இவ்வாறான செயல்திட்டங்களை மேலும் முன்னெடுக்க நிறுவனத்தின் நிர்வாகம் அதன் உறுப்பினர்களைத் தொடர்ந்தும் ஊக்குவிக்கிறது.
 
பிராண்டிக்ஸ் வெலிசர பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் உட்பட பலரின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு தொழில் வாய்ப்புகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சேவையையும் செய்து வருகின்றது. பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம், அமைப்பின் உறுப்பினர்களின் அறிவு மற்றும் திறன்களை மெருகேற்றுவதன் மூலம் திறமையான குழுவாக முன்னோக்கி கொண்டு வர முடிந்தது. மதிப்புகள் அடிப்படையிலான உறுப்பினர்களின் குழுவை வளர்க்கும் ஒரு பள்ளியான பிராண்டிக்ஸ் வெலிசர, சமூகத்திற்கு வெற்றிகரமான நபர்களை உருவாக்கும் ஒரு அமைப்பாகும்.
 
பிராண்டிக்ஸ் வெலிசர, விழித்தெழுந்த மக்களுடன் ஒரே குடும்பமாக வேலை செய்து தொடர்ந்து செழித்து வருகிறது.