என்பது வீதம் பார் அளந்தோனே!
நதி கடல் என்று பல நிறைத்தோனே! – உன்
பன்பது கூறும் பயன்நிறை யாவும்
பாட்டினில் அடக்க ஏட்டிடமுண்டோ!
தாயவள் கருவினில்
சேயினை ஏந்துவாள்,
திங்கள்தான் புத்தென்றால்
தாய்மையை ஏற்றுவாள்,
நீல(ள)மான உன்னுள்
உயிரினம் ஏராளம் – அப்
பாரங்கள் எப்போதும்
இறக்கி யாம் அறியோமே!
மலை மீது நீ ஓடி
மழை போலெ நிலம் நாடி
மகிழ்வோடு மனை எங்கும்
இருளினைப் போக்குவீர்!
மனதார வயிறார
முப்போதும் பசியாற
உணவோதும் பயிறுள்ளே
உல் சென்று ஏறுவீர்!
வாயினில் நுழையும்
வாயற்றோனே – சேவ்
வாயினில் சிக்க
வழி எங்கு கண்டீரோ!
வாக்கினை உரைக்கின்ற
நாக்கது வறண்டால்
வார்த்தைக்கு முன் வந்த
மூத்தவா; அதைத் தேற்ற வா
முதல் வந்த உயிரினம்
உம் உள்ளே கொண்டீர்
கடல் என்று வெளிவந்து
உயிரையும் கொண்றீர்
சுத்தத்தோடு சிக்கனமாய் – உமை
மனிதன்தான் போற்ற மறந்தான்
சத்தத்தோடு அதை எண்ணி
சினம் கூடக் கொள்வீரோ!
தே. மயூரதன்