இறைவனின் கொடை ஒன்று இயற்கையால்
தடையின்றி வாழ்ந்திடும் உயிர்களுக்கும்
வளர்ந்திடும் பயிர்களுக்கும், மாரி மழையாக
ஊரின் ஓடை நீராக நீ செய்திடும் சேவையோ
சிறப்பு, செப்புவதோ எமக்குள்ள பொறுப்பு
பூமிக்கு ஓர் அமுதம் நீ கமக்காரர்களுக்கு
முதல் கடவுளும் நீ. தாகம் தீர்த்திடும்
ஒளடதம் நீ, தேகம் குளித்திட தேவையும் நீ
நீர் இன்றி மரங்களும் சோர்ந்து போயின
மனங்களும் தளர்ந்து போயின, மிருகங்கள் அலைந்து திரிந்தன
பறவைகளும் இப்போ தேசம் விட்டு உன்னை தேடி அலைகின்றன.
சீற்றம் கொண்டதால் சுனாமி ஆனாய்
பலர் ஏற்றம் பெறவும் ஏதுவானாய் நீ
வெள்ளம் என மாறியதால் மக்கள் ஏழைகள்
ஆனார்கள், நாள் உள்ளம் கொண்ட
விவசாயியின் நலன் காக்க நல் எண்ணம்
கொண்டாய்
Y. ஜெகலோசலா