மலேசியாவின், கோலாலம்பூரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற 20வது ஆசிய அணி “ஸ்குவாஷ்” சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை ஆடவர் “ஸ்குவாஷ்” அணி இலங்கையை ஆசிய அளவில் 10வது இடத்திற்கு உயர்த்தியது.
அதற்கு ஒரு சிறப்பு உண்டு. 20 ஆவது ஆசிய அணி ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கு இவ்வாறான தரவரிசைக்கு வரும் வாய்ப்பு 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் கிடைத்துள்ளது இதுவே முதல் தடவையாகும்.
பிராண்டிக்ஸ் உறுப்பினர்களான ரவிந்து லக்சிறி மற்றும் ஷமில் வகீல் ஆகிய இரு “ஸ்குவாஷ்’ சம்பியன்களும் போட்டியில் பங்குபற்றினர். எமது வீரரான ரவிந்து லக்சிரி மற்றும் ஷமில் வகீல் இந்தோனேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர்.
பிராண்டிக்ஸ் குழுமத்தில், எப்போதும் தீர்வுகளுடன் முன்னோக்கி நகர்கிறது, 20வது ஆசிய அணி “ஸ்குவாஷ்” சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் நற்பெயரை உயர்த்துவதற்கு எங்களுடைய சொந்த வீரர்கள் இருவர் பங்களிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
20வது ஆசிய அணி “ஸ்குவாஷ்” சம்பியன்ஷிப் போட்டியில் சிறந்து விளங்கிய ரவிந்து லக்சிறி மற்றும் ஷமில் வகீல் உட்பட இலங்கை ஆண்கள் அணிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!