மழையும் மலையும்,
மண்ணும்….
மலையை முகர்ந்த..
மழை …
ஊற்றாய் உருவெடுத்து
அணையாய் சுற்றி வந்து ….
ஓடைகள் பல ஓடி
அருவியாய் ஆர்ப்பரித்து…
ஆறென்று பேரெடுக்கும்
மண்ணில் புகுந்த மழை…
குட்டையாய் குசலம்
விசாரித்து…
ஊரணியாய் ஊர்ச்
சுற்றி ….
காணாமல் கரை
புரண்டு…
கிணற்றில் அளவேற்றி
நிலத்தில் உயிர்த்தீண்டி….
நதியில் கரை சேர்த்து
வழியெங்கும் வளமாக்கும்….
கடற்தாயின் மடி சேர்ந்து
வாரிசை விண் சேர்க்கும்….
” நீரின்றி அமையாது இவ் உலகு”