அழகிய சபரகமுவாவின் பெருமை பிராண்டிக்ஸ் ரம்புக்கன

பிராண்டிக்ஸ் குடும்பத்தின் மற்றுமொரு பெருமைக்குரிய உறுப்பினரான பிராண்டிக்ஸ் ரம்புக்கனை பற்றி இம்முறை “வியமன் டி.வி.” “ஒரு நிறுவனத்தின் கதை” எனும் நிகழ்ச்சியின் மூலம் பேசுகிறது.

பிராண்டிக்ஸ் Essentials கிளஸ்டரின் ஒரு பகுதியான பிராண்டிக்ஸ் ரம்புக்கன, ஒரு குறுகிய பரப்பளவில் சுமார் 1,350 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் பிராண்டிக்ஸ் ரம்புக்கன நிறுவனம் முதலில் ரம்புக்கனை – கேகாலை பிரதான வீதியில் பின்னவலை தேசிய பாடசாலைக்கு முன்பாக அமைந்திருந்தது. உலகிற்கு புதுமையான தீர்வுகளை வழங்கி நாளுக்கு நாள் பரிணமித்து வரும் பிராண்டிக்ஸ் ரம்புக்கன, நிறுவனம் மீது அனைவராலும் கொண்டுள்ள அன்பும் அர்ப்பணிப்பும் காரணமாகவே தற்போதுள்ள அளவிற்கு வளர்ச்சி அடைய முடிந்துள்ளது.

அழகிய சப்ரகமுவ மாகாணத்தில் ரம்புக்கனை பிராண்டிக்ஸ் நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் மழைக்கு பஞ்சமில்லை. மழையின் மூலம் பெறப்படும் மழைநீரை சேகரித்து பயன்படுத்துவதற்கான அமைப்பை உருவாக்கி இருப்பது இந்நிறுவனத்தின் சிறப்பு அம்சமாகும். மேலும், பிராண்டிக்ஸ் ரம்புக்கன சமையலறை மற்றும் கழிவறை கழிவுகளை சுத்திகரித்து தோட்டக்கலைக்கு பயன்படுத்துவதற்கும், காற்று சீரமைப்பிளிலிருந்து வெளியாகும் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துவதற்கும் அமைப்புகளை உருவாக்கியுள்ளது.

ஒரு சொட்டு நீரைக் கூட வீணாக்காமல் அப்பகுதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பிராண்டிக்ஸ் ரம்புக்கனை, பிராண்டிக்ஸ் ரம்புக்கனை பழைய நிறுவனத்தை தனிமைப்படுத்தப்பட்ட மையமாக நடத்த அனுமதித்ததன் மூலம், கொரோனா தொற்றுநோய் காலத்தில் மற்றுமொரு முன்உதாரணத்தை வழங்கியுள்ளது. பிராண்டிக்ஸ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு முழு பங்களிப்பாளராகவும் திகழ்வது பிராண்டிக்ஸ் நிறுவனம் ஆகும்.

தனது சகோதர அமைப்புகளைப் போலவே மனித நேயத்துடன், பிரதேச மக்களுக்குச் சேவையாற்றும் தனது பணியை முன்னெடுத்துச் செல்லும் பிராண்டிக்ஸ் ரம்புக்கனை, நாட்டிற்கு  சக்தியாகத் மேலும் தனது சேவையினை தொடர த எமது வாழ்த்துக்கள்.