விழித்தெழும் சிறுவர் சந்ததியினருக்காக வழங்கும் ரன்தரு பரிசுகள்

‘மனிதாபிமானம்’ மூலம் மக்களை உயர்த்துவதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் பிராண்டிக்ஸ், தொடர்ந்து ஆறாவது தடவையாகவும் டிசம்பரில் மற்றொரு அற்புதமான   சமூகப்பணியினை செயற்படுத்தி இருந்தது. அதுதான் பிராண்டிக்ஸ் ‘ரன்தரு திலின’ நிகழ்ச்சித்திட்டம் ஆகும். ‘ரன்தரு திலின’ நிகழ்ச்சித் திட்டமானது, எமது இளம் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில், ஜனவரி மாதம் ஆரம்பிக்கும் புதிய பாடசாலை பருவத்திற்கான பாடசாலைப் பைகள் மற்றும் ஏனைய பாடசாலைப் பொருட்களை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் செயல்த்திட்டமாகும்.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “ரன்தரு திலின” திட்டமானது இதுவரை கிட்டத்தட்ட 37,000 சிறார்கள் பயனடைந்துள்ளதுடன், இந்த வருடம் பிராண்டிக்ஸ் உறுப்பினர்களின் 8,354 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. நிறுவன மட்டத்தில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி ‘ரன்தரு திலின’ நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

கல்வி அமைச்சுடன் இணைந்து பிராண்டிக்ஸ் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு கல்வி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இம்முறை இத்திட்டத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. கல்வியின் பெறுமதியை உணர்ந்து, ‘ரன்தரு திலின’ திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, முதன்முறையாக அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினோம்.

நமது முன்னோர்கள் கல்வியின் மதிப்பைக் கண்டார்கள் என்பதற்கு பின்வரும் கவிதை சிறந்த உதாரணம்.

கள்வர்களால் திருட முடியாதது கல்வி …

வெள்ளத்தால் அழிக்க முடியாதது கல்வி…..

அரசனால் அபகரிக்க முடியாதது கல்வி ….

கற்றறிந்த கல்வியே எக்காலமும் அழியாதது …

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், பிராண்டிக்ஸ் நாட்டின் எதிர்காலத்தை கையகப்படுத்தும் சிறுவர்களின் கல்வியை மேம்படுத்தும் உன்னத நோக்கத்துடன் செயலில் உள்ள ‘ரன்தரு திலின’ திட்டத்தைப் செயல்படுத்த முடிவு செய்தது. திருடக்கூடிய ஆயிரம் பொருட்களில் யாராலும் திருட முடியாதது நாம் பெற்ற கல்வி ஆகும். எமது ‘ரன்தரு திலின’ நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக பிராண்டிக்ஸ் வழங்கும் பாடசாலை உபகரணங்கள் எமது சொந்த சிறுவர்களின் கல்விக்கு பெரும் உதவியாக இருப்பதை நாம் அறிவோம். எவராலும் திருட முடியாத பொக்கிஷமாக விளங்கும், அவர்கள் முறையான கல்வியைப் பெற்று வாழ்வில் வெற்றிபெற நாம் வழங்கும் புத்தகங்கள் உட்பட பாடசாலை உபகரணங்கள் உதவும் என்பதில் ஐயமில்லை.

‘ரன்தரு திலின’ பெற்ற சிறுவர்களே, நாளைய உலகை வெல்லும் வலிமையும், தைரியமும் பெற வாழ்த்துகிறோம்…

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *