ஒரு கவிதை நண்பராக நமக்கு ஆறுதல் கூறுகிறது

கவிதைக்கு ஒரு மனிதனின் இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது. இம்முறை வியமன் தொலைக்காட்சியில் ‘விழித்தெழுந்த வாழ்வு’ வில், மனதில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, மனதிற்கு ஆறுதல் தரக்கூடிய ஒரு கவிதை எப்படி நம் வாழ்க்கையை மாற்றும் ஊடகமாக மாறும் என்பதைப் பற்றி பேசினோம். ‘விழித்தெழுந்த வாழ்வு’ என்ற தலைப்பில் பிராண்டிக்ஸ் ரம்புக்கனை நிறுவனத்தின் உளவியல் ஆலோசகர் திருமதி ரோஷனி பண்டார கலந்துரையாற்றினார்.

“கவிதைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கலாம். நம் வாழ்வின் ஒரு கட்டத்தில் நம்மை நாமே சந்திக்கும் இடம் என்று கவிதையை சொல்லலாம். வாழ்க்கையில் சோகம், வலி, பிரிவு, நிராகரிப்பு என அனைத்தையும் இணைத்து எழுதப்பட்ட கவிதைகள் உண்டு. கவிதையை ரசிக்கக் கூடியவர் உணர்ச்சிகரமான இதயம் கொண்டவராக மாறலாம்.

சில நிகழ்வுகளைப் பற்றிய எண்ணங்களை ஆக்கப்பூர்வமாக கவிதையாக மாற்றக்கூடியவர் சுய ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்கிறார். அவ்வாறு செய்வதில் அந்த நபர் பெரும் ஆறுதலைக் பெறுகிறார் என்றும் கூறமுடியும். கோபம், வெறுப்பு  போன்ற எண்ணங்கள் தமக்கு வரும் பொழுது அதனை பற்றி எழுத முடியுமானால், நாம் பின்னர் அதனை வாசிக்கும் பொழுது  “எமக்கு ஏன் இந்த எண்ணம் வந்தது?” என்று சிந்திக்க தோன்றும். இதன் மூலம் நம்மை நாமே மாற்றிக் கொள்ளக் கவிதையை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தலாம். எங்களிடம் ஆலோசனை கேட்க வருபவர்கள் கூட, “இது நடந்த போது நான் இந்த கவிதையை எழுதினேன்” என்று கூறுகிறார்கள். எனவே, மன அமைதியைப் பெற கவிதை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கூறலாம்.

ஒரு நல்ல படைப்பாளர் உருவாகுவதற்கு அனுபவம் அவர்கள் அனுபவிக்கும் விஷயங்களில் வேரூன்றியுள்ளது. நம் வாழ்வில் மகிழ்ச்சியும் துன்பமும்  வருகின்றன, வெற்றி தோல்விகள் வருகின்றன, அங்கீகாரங்களும் நிராகரிப்புகளும் வருகின்றன. இவற்றையெல்லாம் சமமாகத் தாங்கிக் கொண்டு, மனதைத் திடப்படுத்திக்கொண்டு முன்னேறுவதற்கு, இலக்கியத்திலும், கவிதையிலும் நாட்டமுள்ளவருக்குப் பேருதவியாக இருக்கும்.

கவிதையை நேசிப்பவர், பாடலை ரசிப்பவர், சில சமயங்களில் எந்தளவுக்கு பிரச்சனைகளை சந்திக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக இன்னொருவனை தாராளமாக நேசிக்கிறான். மேலும் கவிதையுடன் தொடர்பு கொள்பவர் ஒரு பிரச்சனை வரும்போது இன்னொருவரைப் புரிந்து கொள்ளும்  வாய்ப்பு அதிகம் உள்ளது.”

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *