பரிணாமம் அடைந்த மனதுடன் விழித்தெழுந்த பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை

இம்முறை வியமன் தொலைக்காட்சியின் ‘நிறுவனத்தின் கதை’ நிகழ்ச்சியில், அழகிய சூழலுக்கு மத்தியில் அமைந்திருக்கும்  பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை நிறுவனத்திற்கு இடமளிக்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டு சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட பிராண்டிக்ஸ் மினுவாங்கொடைநிறுவனம் தற்போது மாபெரும் வளர்ச்சியடைந்த நிறுவனமாக உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தில்1400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை, பிராண்டிக்ஸ் குழுமத்தின் ஏனைய நிறுவனங்களைப் போலவே, அதன் உறுப்பினர்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கையை வலுப்படுத்துவதற்கும், அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது. அதனால்தான் நிறுவனத்தை  சார்ந்தவர்களும் அந்த நிறுவனத்தைப் பற்றி மிக நெருக்கமான உணர்வுடன் பேசுகிறார்கள். குறிப்பாக மனிதாபிமான முயற்சியான ‘ரன்தரு திலின’ திட்டத்தின் மூலம் பிராண்டிக்ஸ் உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் நலனுக்காகவும், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பிரதேசத்திலுள்ள ஏனைய இடங்களுக்கும் சிறந்த சேவையினைச் செய்து வருகின்றது. மினுவாங்கொட பிரதேசத்திற்கு அதிகூடிய சேவையை வழங்கி, பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் சக்தியாக தொடர்ந்தும் விளங்கும் என்பதே பிராண்டிக்ஸின் எதிர்ப்பார்ப்பாகும்.

ஏறக்குறைய 30 வருடங்களாக தனது சகோதர நிறுவனங்களைப் போன்று உலகிற்கு ஈர்க்கப்பட்ட தீர்வுகளை வழங்கி வரும் பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை, பிராண்டிக்ஸின் பெருமையை சிறந்த முறையில் உலகிற்கு தொடர்ந்தும் வெளிப்படுத்தும் பலத்தை பெறவேண்டும் என்று வியமன் நாம் பிரார்த்திக்கின்றோம்.