சர்வதேச கல்வி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது. கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கருப்பொருள்களின் கீழ் கொண்டாடப்பட்டு அதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. பிராண்டிக்ஸ் நிறுவனமும் கல்வியின் மதிப்பை முழுமையாக உணர்ந்து பல ஆண்டுகளாக அதன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அவர்களின் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரு நிறுவனமாகும்.
ரன்தரு திலின, ரன்தரு புலமைப்பரிசில், ரன்தரு அபிஸேஸ், ஷில்ப மற்றும் P.A.C.E போன்ற திட்டங்கள் பிராண்டிக்ஸ் உறுப்பினர்களின் எதிர்காலத்தை மேலும் பாதுகாப்பதற்காக செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்களால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.
ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள புதிய பாடசாலை தவணைக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை பிராண்டிக்ஸ் உறுப்பினர்களின்பிள்ளைகளுக்கு வழங்குவதே ‘ரன்தரு திலின’ நிகழ்ச்சித்திட்டத்தின் செயல்பாடாகும். இது முன்பள்ளி மட்டத்திலிருந்து தரம் 5 வரையிலான குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் உயரிய குறிக்கோளுடன் பிராண்டிக்ஸ் இந்த திட்டத்தை சமூக நற்பணி முன்முயற்சியாக ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வருடாந்தம் 8,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் ‘ரன்தரு திலின’ திட்டத்தினால் பயனடைவதுடன் இதுவரை இத் திட்டத்தினூடாக 43,000 இற்கும் அதிகமான சிறுவர்களை பயனடையச் செய்ய பிராண்டிக்ஸ் எம்மால் முடிந்தது.
‘ரன்தரு புலமைப்பரிசில்’ திட்டம், பல்கலைக்கழகத்திற்கு தகுதியுடைய பிராண்டிக்ஸ் உறுப்பினர்களின் பிள்ளைகளின் உயர் கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘ரன்தரு புலமைப்பரிசில்’ திட்டத்தின் மூலம் 700க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியை பலப்படுத்த பிராண்டிக்ஸ் எம்மால் முடிந்துள்ளது.
‘ஷில்ப’ என்பது நிதிச் சிக்கல்கள் அல்லது பல்வேறு காரணங்களால் கல்வியைத் தொடர முடியாத உறுப்பினர்களுக்கு கல்வியைத் தொடர உதவும் செயல்திட்டமாகும். இந்தத் திட்டமானது இந்த உறுப்பினர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்க உதவியுள்ளது. 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை 183 பேர் பயனடைந்துள்ளனர்.
P.A.C.E என்பது 2012 இல் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மூலம் இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டமானது பிராண்டிக்ஸ் உறுப்பினர்களுக்கு அவர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்த வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2021 இல் தொடங்கப்பட்ட மற்றொரு கல்வித் திட்டம் ‘ரன்தரு அபிஸேஸ்’. பிராண்டிக்ஸ் மாதிரி கிராம திட்டத்தின் எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் திறமையான குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிராண்டிக்ஸ் என்பது சமூகப் பொறுப்பை எப்போதும் தன் பொறுப்பாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும். இதன் பிரகாரம் அறிவுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்க அவர்களின் கல்வியை வலுப்படுத்துவதன் மூலமும், பல ஆண்டுகளாக பிராண்டிக்ஸ் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாக நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் அனைவரும் அதன் அதிகபட்ச பலன்களைப் பெற்று கல்வியிலும் நற்பண்பிலும் முன்னேற வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்