நாம் உடல் ரீதியாக நோய்வாய்ப்படுவது போலவே, நம் உள ரீதியாகவும் நோய்வாய்ப்படுகிறோம். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரை சந்தித்து மருந்து சாப்பிடுகிறோம். ஆனால் மனம் நோயுற்றால் நம்மை நாமே குணப்படுத்திக் கொள்வோமா? இது தொடர்பாகத்தான் இம்முறை வியமன் தொலைக்காட்சி “பிபிதுனு திவியக்”/ ‘விழித்தெழுந்த வாழ்வு’ நிகழ்ச்சி மூலம் உரையாடுகிறோம். அந்த கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சியில் பிராண்டிக்ஸ் வத்துபிடிவல நிறுவனத்தின் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் திருமதி நதீரா பிரசன்சனி கலந்துகொண்டார்.
பெரும்பாலும் நம்மில் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சி செய்கிறோம் ஆனால் நல்ல உள ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சிப்பதில்லை. நாம் அதிக எடையை உணரும்போது, உடற்பயிற்சி செய்து அழகாக இருக்க முயற்சிப்போம். ஆனால் நாம் இருக்க வேண்டியதை விட சோகமாக இருப்பதாக உணர்ந்தால், நாம் முன்னர் செய்ததைச் செய்ய விரும்பவில்லை என்றால், முன்பை விட வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தால், அதைப் பற்றி நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்கள் தங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் இதைப் பற்றி கலந்தாலோசிக்ககூட முயற்சிப்பதில்லை. பெரும்பாலான மக்கள் உடல் உபாதைகளை மட்டுமே கவனிக்கிறார்கள்.
நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது சாப்பிட முடியாது, ஒரு வேலையைச் சரியாகச் செய்வது கடினம். மனம் நோயுற்றால் உடலும் நோய்வாய்ப்படும். எனவே, நீங்கள் மனச்சோர்வடைந்தால், அது வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்காமல், உளவியல் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பிராண்டிக்ஸ் நிறுவனத்திலும் ஒரு உளவியலாளர் இருக்கிறார். அத்தகைய நேரங்களில் உங்கள் மனக்குறைகளை அவர்களுடன் ஆலோசிக்கலாம். உங்கள் வாழ்க்கைக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. யாராவது ஒரு ஆலோசகரிடம் பேசப் போவதைக் கண்டால் அவர்கள் ஏதாவது நினைப்பார்கள் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படி நினைக்க வேண்டாம். உடல் உபாதைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறுவது போல், இதுவும் ஒரு பொதுவான விடயம்தான்.
நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிக்க நாம் செய்யக்கூடிய விஷயங்கள் பல உள்ளன. அதற்காக நேரம் ஒதுக்கி, உங்களின் பலவீனங்கள், திறன்கள் மற்றும் அபிவிருத்தி செய்ய வேண்டுய பகுதிகள் என்ன என்பதை குறைத்துக்கொள்ளுங்கள். அது நம்மைப் பற்றிய நல்ல புரிதலை அளிக்கிறது. மேலும், சிலர் துக்கத்தை உணரும்போது வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் சிலர் தங்கள் வருத்தத்தை மறைக்கிறார்கள். அப்படிப்பட்ட சமயங்களில், துக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்கலாம். அதிலிருந்து நிவாரணம் பெறலாம். உடற்பயிற்சி உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.
ஆரோக்கியமான, நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ, உடல் மற்றும் மன நலனைப் பராமரிக்க நாம் கடினமாக உழைக்க வேண்டும். அப்போது உங்கள் வாழ்க்கையில் தெளிவான மாற்றத்தைக் காண வாய்ப்பு கிடைக்கும்.