இலக்கங்களை விட மனித நேயத்தை நேசிக்கும் நபர்

பிராண்டிக்ஸ் மினுவாங்கொடை மனித வள முகாமையாளர் பியல் சமரசிங்க, இம்முறை வியமன் தொலைக்காட்ச்சியில்  “ஹந்துநாகத்தொத் ஒப மா”/ ‘என்னை அடையாளம் கண்டு கொண்டால்’ நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அழகிய பலாங்கொடை கிராமத்தில் பிறந்த திரு.சமரசிங்க தனது கனவுகளை பின்தொடர்ந்து வெற்றி பெற்றவர் ஆவார்.

“நான் எனது கல்வியின் முதல் அடியை பலாங்கொடை தேசிய பாடசாலையில் ஆரம்பித்தேன். பாடசாலையில் எனக்கு நிறைய சிறப்பு அனுபவங்கள் கிடைத்தன. எனது படிப்பைத் தவிர, நான் அடிக்கடி விளையாட்டுகளில் ஈடுபட்டேன்.

பாடசாலை படிப்பு முடிந்ததும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் நான் முன்னேறுவதற்கு ஒரு புதிய பாதை திறக்கப்பட்டது. நான் பல்கலைக்கழகத்தில் நீச்சல் பயிற்சி செய்தேன், நீச்சலில் பல்கலைக்கழகத்தில் நிறைய சாதனைகளை அடைய முடிந்தது.

அதேபோல் எனக்கு நிதித்துறையில் நிறைய ஆர்வம் இருந்தது. நிதித்துறையில் வேலை பெறுவதே எனது குறிக்கோளாக அமைந்தது. இதே துறையில் எனக்கு முதலாவது வேலையும் கிடைத்தது. ஆனால் நான் நிதித்துறையில் பணிபுரியும் போது, ​​இலக்கங்கள் மற்றும் எண்களைக் கொண்டு வேலை செய்வதை விட, மக்களுடன் பழகுவதையே நான் விரும்புகிறேன் என்பதை உணர்ந்தேன். அதே சமயம் நிதித்துறையை விட்டு வெளியேறி மனித வளத்துறையில் கவனம் செலுத்த முடிவு செய்தேன்.

மனித வளத்துறையில் சேர்ந்த பிறகு, பிராண்டிக்ஸ் போன்ற நிறுவனத்தில் பணிபுரிய விரும்பினேன். 2014 ஆம் ஆண்டு நான் பிராண்டிக்ஸ் அவிசாவளையில் இணைந்த போது எனது கனவை நனவாக்கினேன். பின்னர் 2017 இல் நான் பிராண்டிக்ஸ் மினுவாங்கொடையில் சேர்ந்தேன்.

நான் பிராண்டிக்ஸில் இருந்த காலத்தில், சவால்களை எவ்வாறு சமாளிப்பது மற்றும் அவற்றால் வரும் வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதை நான் கற்றுக்கொண்டேன். எமக்கு வரும் சவால்களை முகம்கொடுக்க எனது குழு எப்போதும் என்னுடன் இருந்தது.

மேலும் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கனவுகள் வெல்லும் வரை அதனை துரத்திக்கொண்டே இருங்கள். அப்போது உங்களுக்கு முடியும் நீங்கள் யார் அறிந்துகொள்ள . உங்கள் கனவுகளை அடையக்கூடிய அணியில் சேர்ந்தால்தான் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள முடியும்அப்போதுதான் நாம்மால் வெற்றிபெற முடியும். ”

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *