நம்மில் பலர் வாழ்க்கையில் முதலாமவராக இருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அவர்களால் அவர்களின் திறமைகளை அடையாளம் காண முடிந்தால், அவர்கள் முதலாமவராகவோ அல்லது கடைசியாகவோ இல்லாமல் வெற்றிகரமான வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இம்முறை அப்படி ஒரு வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்ட ஒரு கதாபாத்திரம் வியமன் டிவியின் ‘ஹந்துநாகத்தொத் ஒப மா’/ “என்னை நீ அறிந்துகொண்டால்” நிகழ்ச்சியில் இணைந்துக்கொண்டார். அவர் பிராண்டிக்ஸ் கஹவத்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் விராஜ் டி சில்வா ஆவார்.
“எனது சொந்த ஊர் மாத்தறை. நான் மாத்தறை ராகுல கல்லூரியில் படித்தேன். என் அப்பா ராணுவத்தில் இருந்தார். அம்மா கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்தார். குடும்பத்தில் நான்தான் மூத்தவன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். நான் படித்த பள்ளி எனக்கு ஒரு பெரிய உந்துகோலாக இருந்தது. பாடக்கல்வியை விட வெளிக்கள நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டினேன். பாடசாலை பருவம் முடிந்ததும் என்னால் பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லை. பெரிய இலக்கு என்று எதுவும் இருக்கவில்லை. இசையை நான் மிகவும் நேசித்தேன், நான் எப்போதாவது ஒரு இசை கலைஞனாக வரவேண்டும் என்று நினைத்தேன்.
அப்போது இன்டர்நெட் வசதி இல்லாததால் செய்தித்தாள்கள் அக்காலத்தில் பார்க்கப்பட்டன. பெரும்பாலான வேலை வாய்ப்புகள் ஆடைத் தொழிலிளில் தான் இருந்தன. வேலை செய்து நல்ல இடத்துக்கு வர வேண்டும் என்ற உந்துதலால், “கார்மென்ட் இண்டஸ்ட்ரியுடன்” இணைந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன்.
நான் ஒருபோதும் வகுப்பில் முதலாம் மாணவனாக இருந்ததில்லை, கடைசியானவனாகவும் இருந்ததில்லை. நான் முதல் மாணவனாக இல்லை என்ற வருத்தம் எனக்கு இருந்ததில்லை. ஆனால் அம்மாவும் அப்பாவும் மிகவும் கவலையாக இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். இன்று நான் இருக்கும் நிலை தொடர்பாக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது திறனைக் கண்டறியவும் நான் யார் என்பதைக் கண்டறியவும் என்னால் முடிந்ததைத் தான் நான் செய்தேன்.
வேலை கிடைத்தவுடன், ஒரு நாள் பிராண்டிக்ஸ் போன்ற பிரபலமான நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வேன் என்று நினைத்தேன். அதற்கு என்ன தகுதி வேண்டும் என்று யோசித்தேன். நான் ஒரு நிறுவனத்தில் சுமார் 15 வருடங்கள் வேலை செய்தேன். அந்த 15 வருடங்களில், உற்பத்தி, தர சோதனை என அனைத்து துறைகளிலும் அங்கு பணியாற்றினேன். என் வாழ்க்கையில் நிறைய பின்னடைவுகளை சந்தித்தேன். ஆனால் நான் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களைச் தொடர்ந்து செய்தேன்.
நான் 2016 இல் பிராண்டிக்ஸ் நிறுவனத்தில் தொழிற்சாலை முகாமையாளராக சேர்ந்தேன். ஒரு வருடத்தில் துணைப் பொது முகாமையாளராக வர முடிந்தது. சுமார் இரண்டு வருடங்கள் கழித்து நான் பொது முகாமையாளராக பதவி உயர்வு பெற்றேன்.
மனிதர்கள் தங்கள் மதிப்புகளை அறிந்து கொண்டில்லை . அவர்களின் திறமை என்ன என்பதை சிந்திக்க வேண்டும். பிரச்சனைகள் வரும்போதுதான் தீர்வு காண வேண்டும். நாம் சிந்திக்கும் முறையை மாற்ற வேண்டும். நம்மால் முடியும் என்று நினைக்க வேண்டும். நீங்கள் எந்த வகையிலும் வெற்றிபெறவில்லை என்றால், நீங்கள் பிற செயல்பாடுகளுக்கு செல்ல வேண்டும். நமது எண்ணங்கள் ஒரு செயலாக வேண்டும் . காலப்போக்கில், அந்த செயல்கள் ஒரு பழக்கமாக மாறுகிறது. அந்தப் பழக்கத்தின் மூலம்தான் ஒரு கதாபாத்திரம் உருவாகிறது. அந்த குணம்தான் ஒருவனை அவனது இலக்கை நோக்கி செலுத்துகிறது. பிராண்டிக்ஸ் என்பது விழித்தெழுந்த தீர்வுகளை வழங்கும் ஒரு இடம். ஒருவர் பின்வாங்காமல் முன்னேறிச் செல்ல பிராண்டிக்ஸில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.