இரத்தினபுரி மாவட்டத்தில் அழகான பிரதேசத்தில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் கஹவத்தை நிறுவனம் பற்றிய கதையை, இம்முறை வியமன் TVயின் “ஒரு நிறுவனத்தின் கதை” நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்காக கொண்டு வருகிறோம்.
லக் ஷர்ட் கஹவத்தை என்ற பெயரில் 1992 இல் நிறுவப்பட்ட பிராண்டிக்ஸ் கஹவத்தை நிறுவனம் ஆரம்பத்தில் சுமார் 600 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து உலகத்தரம் வாய்ந்த விழித்தெழுந்த தீர்வுகளை வழங்குகிவரும் பிராண்டிக்ஸ் கஹவத்தை நிறுவனம் தற்போது சுமார் 1,300 உறுப்பினர்களை பணியமர்த்தி உள்ளது. பிராண்டிக்ஸ் கஹவத்தை நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான சூழலில் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குகிறது. மேலும், பிராண்டிக்ஸ் குழும மனிதவள பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ரசதிய ஹிரு” போட்டியில் பிராண்டிக்ஸ் கஹவத்தை நிறுவனம் தொடர்ந்து 10 மாதங்கள் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.
பிராண்டிக்ஸ் எப்போதும் தனது சொந்த வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் நிறுவனம் அல்ல. அதனால்தான் பிராண்டிக்ஸ் ‘மனுசத்கார’ / “மனிதாபிமானம்” மற்றும் ‘ஹரித திரசர’ போன்ற திட்டங்களின் மூலம் மனித குலத்திற்க்கும், பூமித் தாய்க்கும் சேவை செய்ய பிராண்டிக்ஸ் செயற்பட்டது. பிராண்டிக்ஸ் கஹவத்தை நிறுவனம் இக்கொள்கைகளை பின்பற்றி 50க்கும் மேற்பட்ட சமூக நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. கஹவத்தை பிரதேசத்தில் 17 க்கும் மேற்பட்ட மாதிரிக் கிராமத் திட்டங்களையும் இந் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது. பிரண்டிக்ஸ் கஹவத்தை தனது உறுப்பினர்களின் நலனுக்காக 25 மில்லியனுக்கும் அதிகமான தொகையை “நிறுவன தலைவர் நன்கொடை நிதியத்தின்” ஊடாக வழங்கி வைத்துதுள்ளது.
பிரண்டிக்ஸ் கஹவத்தை நிறுவனம் தனது துடிப்பான உறுப்பினர்களின் குழுவுடன், நாளுக்கு நாள் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே வியமன் எமது பிரார்த்தனையாகும்!