அன்பென்றால் அடங்குவாள்
அயராத அலை இவள்
ஆர்ப்பரித்தால் அனலாவால்
இனிமை தரும் அமுதவள்
இன்னல்களில் இடிந்து போவாள்
இருந்தும் மீண்டெழுவாள்
ஈரமான நெஞ்சத்தால்
ஈர்க்கும் மெய்யழகாள்
உண்மைக்கு உரமாவால்
உத்திராத புன்னகையால்
உறக்கமத்தில் மெல்லெழுவாள்
ஊமையாக உள்ளழவாள்
எல்லை கோட்டிட்டு வாழ்பவள்
ஏக்கம் நூறு கொண்டவள்
ஐயமின்றி துணிபவள்
ஐம்பூதங்களும் ஆனவள்
என்றும் புரியா புதிர் இவள்!!!
மேனகா
பிராண்டிக்ஸ் மட்டக்களப்பு நிறுவனம்