உலகமே தாயின் பாலாலும் சூரியக் கதிர்களாலும் ஆனது என்று உலகின் தலைசிறந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி கூறியுள்ளார். சூரியன் உலகம் முழுவதற்கும் ஒளியையும் வாழ்வையும் தருவது போல, பெண்களால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் விழித்தெழவைக்க முடியும். இம் முறை வியமன் தொலைக்காட்சியில் ‘விழித்தெழுந்த வாழ்வு’ நிகழ்ச்சியின் மூலம் உலகை விழித்தெழச்செய்ய்யும் பெண்ணைப் பற்றி பேசுகிறோம். பிரண்டிக்ஸ் ரம்புக்கன நிறுவனத்தின் உளவியல் ஆலோசகர் திருமதி ரோஷனி பண்டார இம்முறை வியமன் தொலைக்காட்சியில் இணைந்து இது தொடர்பாக பேசியுள்ளார்.
“இலக்கியங்களிலும் பாடல்களிலும் பெண்களை மென்மையான பாத்திரங்களாகப் பார்க்கிறோம். ஆனால் நாம் பார்க்கும் பெண்களில், மிகவும் வலிமையான, தன்னம்பிக்கை கொண்டவர்களையும் காண்கிறோம். பெண்கள் தனி நபராக இருந்தாலும் வெவ்வேறு பாத்திரங்களை வகிக்கிறார்கள். மகள், சகோதரி, தோழி, மனைவி, தாய் ஆகிய பாத்திரங்களை வைத்தே ஒரு பெண்ணை நாம் அடையாளம் காண முடியும்.
நாம் காணும் பெண்கள் சவால்களுக்கு மத்தியில், நிராகரிப்புக்கு மத்தியில், சில முரண்பாடுகளுடன் தனியாக வாழ்வதும் உண்டு. அவர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்கவும், வளர்க்கவும், பராமரிக்கவும் கடினமாக உழைக்கிறார்கள். போருக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் மனைவிகளை நாம் காண்கிறோம். ஆனால் இந்த தைரியமான பெண்ணைப் பற்றி பேச யாரும் இல்லை. இந்த விஷயங்களை மனதில் கொண்டு, ஒரு பெண் ஒரு சக்திவாய்ந்த வடிவம் என்று கூறமுடியும்.
சமூகம் பெண்களை சில கட்டமைப்பிற்குள் கட்டமைக்க முயல்கிறது. நாம் வாழும் சமுதாயம்தான் சமூகமும் ஆகும். சில பொறிகளில் பெண் வீட்டில் இருக்க வேண்டும், அவளுடைய உரையாடல்கள், அவளுடைய நடத்தை இப்படி இருக்க வேண்டும் என்று நாமே உருவாக்கிக் கொண்டோம். பெண் இப்படி இருக்க வேண்டும் ஆண் இப்படி இருக்க வேண்டும் என்று சமூகம் உருவாக்கிய பிரிவினைகள் உள்ளன. அத்தகைய வகைப்பாடுகள் தேவையில்லை.
ஒரு பொறுப்பான நபராக முன்னோக்கிச் செல்லும்போது, பெண் மற்றும் ஆண் ஆகிய இரு கதாபாத்திரங்களும் தோளோடு தோள் இணைந்து செயல்படுகின்றன. சமையல் செய்வது பெண் என்று சொன்னாலும், ஹோட்டல் துறையில் ஆண்கள் மாபெரும் சமையல் கலைஞர்களாக இருப்பதைப் நாம் பார்க்கிறோம். ஆடைத் துறையில், வணிகத் துறையில் மிகப்பெரிய பெண் கதாபாத்திரங்கள் உள்ளன. குடும்பத்தில் இதை மாற்றினால் சமூகக் கருத்து தானாகவே மாறும்.
பெண் மாணிக்கம் அல்ல பொக்கிஷம். தங்கம், ரத்தினங்கள் மற்றும் இவை அனைத்தும் ஒரு புதையலின் உள்ளே காணலாம். அதில் உள்ள சக்தி, பிரகாசம், எல்லாம் அதிகம். ஒரு பெண் தம்மை மட்டுப்படுத்தாமல் தன் பலம், திறன்கள், நம்பிக்கைகள், கனவுகள் அனைத்தையும் நனவாக்க முடிந்தால், அதுவே உலகமாகவும் , நாடாகவும் முன்னேற ஒரு காரணமாக அமையும்.
இன்றைய சமூகத்தில் இளைய தலைமுறையினர் தங்கள் மனைவிக்கு உதவுவதைப் பார்க்கிறோம். அவளுடைய விருப்ப வெறுப்புக்களை அறிந்துக்கொள்கிறார்கள். இந்த பரஸ்பர புரிதல் அவர்களிடம் உள்ளது. சிறுவயதிலிருந்தே இவற்றைப் பயிற்சி செய்ய முடிந்தால், இந்த மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடிந்தால், அது ஒரு பெண்ணின் வலிமையையும் தைரியத்தையும் மேலும் அதிகரிக்க காரணமாக அமையும்.”