பெண் அகிம்சையின் உயிருள்ள அடையாளம் என்று மகாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை கூறியுள்ளார்கள். அமைதியின் அமுதம் தேவைப்படும் ஒரு குழப்பமான உலகிற்கு அமைதியின் கலையை கற்பிக்கும் பணி பெண்களுக்கு உள்ளது என்று காந்தி வலியுறுத்தினார்.
‘தாயே கண்கண்ட தெய்வம்’ என்ற கூற்றை நாம் அனைவரும் கேட்டிருப்போம். பௌத்த சமுதாயம் ஒரு பெண்ணின் தாய்மையை வைக்கும் மகத்தான இடம் அது. ஹிந்தியில் ‘மா ஹி கங்கா – மா ஹி யமுனா’ என்றால் தாயே கங்கை நதி, தாய் யமுனை என்று பொருள். இந்தியாவிற்கு உணவளிக்கும் கங்கை மற்றும் யமுனை நதிகளைப் போல ஒரு பெரிய நதி அம்மா என்பதுதான் இதன் அர்த்தம். இந்தி பாடல் இலக்கியத்தில் பெண்ணுக்கு வழங்கப்படும் உயர்ந்த இடம் என்று அந்த வரிகள் கூறுகிறது. ஒவ்வொரு இலக்கியத்திலும் பெண்ணாகிய தாய்க்கு உயர்ந்த இடம் கொடுக்கப்படுகிறது.
தாய், மனைவி, சகோதரி, மகள் எனப் பல்வேறு வடிவங்களில் பெண் கதாபாத்திரங்கள் நம் வாழ்வில் வருகின்றன. இப்படி வித்தியாசமான வடிவங்களோடு நம் அனைவரின் வாழ்விலும் தோழியாக நட்பின் ஒளியைக் கொண்டு வருபவள் பெண். இலக்கியத்தின் படி, ஒரு பெண் சில சமயங்களில் அன்பின் உருவகமாக குறிப்பிடப்படுகிறாள்.வேறு சில இடங்களில், பெண்கள் சகிப்புத்தன்மையின் உருவகம், தியாகத்தின் உருவகம், புரிதலின் அடித்தளம், செழிப்பு அல்லது கவனிப்பு, பாசம் மற்றும் அரவணைப்பு ஆகியவற்றின் ஆதாரமாக விவரிக்கப்படுகிறார்கள்.
வேலை செய்யும் இடம் முதல் உலகம் வரை குடும்பத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டு. பிராண்டிக்ஸ் என்பது அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பணிபுரியும் இடம் ஆகும். அவர்களுக்கு அவர்களுக்குள்ளேயே இயல்பாக அன்பையும் இரக்கத்தையும் வளர்க்கும் வலிமையும், தைரியமும், பாசத்தை பரப்பக்கூடிய வலிமையும் அவர்களிடம் உள்ளது. தம்மிடம் இருக்கும் இந்த உன்னதப் பண்புகளுடன் பணிக்கு வர முடிந்தால், மன அழுத்தமோ, இன்னல்களோ இல்லாமல் கடமையைச் செய்ய முடியும். மேலும், பெண்ணுக்குத் தேவையான கவனிப்பு, சரியான தொடர்பு, பரஸ்பர மரியாதை ஆகியவற்றை ஆண்கள் கடைப்பிடித்தால், எந்தவொரு வீடும் அல்லது பணியிடமும் அழகான இடமாக உருவாகும்.
நம் நாட்டின் மக்கள்தொகை அமைப்பை எடுத்துக் கொண்டால், அதிக சதவீதம் பெண்கள். எனவே, அடுத்த பத்து ஆண்டுகளில் அதிகமான பெண்கள் தொழில் சந்தைக்கு வருவார்கள் என்றும், பெண்கள் நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு உயர்த்தப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நமது நாடு உட்பட பல நாடுகளில் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த திசையையும் பெண்களே தீர்மானிக்கும் ஒரு காலம் வேகமாக நெருங்கி வருவதாக அது கூறுகிறது.
உலக மகளிர் தினத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், , குறிப்பாக இளம் பெண்களாகிய நீங்கள், இணையப் பெண்ணாக இருக்காமல், பூமியில் இறங்கி, உலகத்தின் யதார்த்தத்தை உணர்ந்து, மக்களுடன் சரிசமமாக போராடக்கூடிய தைரியத்தை வெளிக்காட்டும் ஒரு பெண்ணாக மாற வேண்டும் என்பதை அன்புடன் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்க்கும் அதே அன்புடனும் பாசத்துடனும் உலகைப் பார்க்கக்கூடிய தைரியமான பெண்ணுக்கு இளமைதான் அடித்தளம் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த இளம் வயதிலேயே எதிர்காலத்திற்குத் தேவையான ஆற்றலை உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை திட்டமிடுங்கள். உங்கள் சம்பளம் அல்லது வருமானத்தைப் பொருட்படுத்தாமல் உங்கள் செலவுகளைத் திட்டமிடுங்கள். மற்றும் சேமிப்பை திட்டமிடுங்கள். முதலீட்டைத் திட்டமிடுங்கள். இன்று நீங்கள் காண விரும்பும் எதிர்காலத்தை இன்றே உருவாக்குங்கள்.
தரிந்து தனஞ்சய வீரசிங்க
சிரேஷ்ட விரிவுரையாளர்
மனித வள முகாமைத்துவ ஆய்வுகள் பிரிவு
களனி பல்கலைக்கழகம்