"நவீனமயமாகும் உலகில் மாற்றத்தை ஏட்படுத்த எனக்கு தேவையேற்பட்டது"

உலகில் பலர் மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார்கள், ஆனால் அதற்காக முயற்சி செய்வதில்லை. ஆனால், மாறாத துணிச்சலுடன் மாற்றத்தை நோக்கிச் செல்லும் கதாபாத்திரங்களையும் எம்மத்தியில் காணலாம். இம்முறை வியமன் டிவியின் ‘ஹந்துநாகத்தொத் ஒப மா’ (நீங்கள் என்னை அறிந்துகொண்டால்) நிகழ்ச்சியில் அப்படியொரு கதாபாத்திரம் இணைந்தார் . அவர் பிராண்டிக்ஸ் ரிதீகமவின் பிரதிப் பொது முகாமையாளர் நிரோஷ் இந்துனில் ஆவார்.

“குளங்களால் அமையப்பெற்ற மாநிலத்தில் உள்ள பொலன்னறுவை தான் எனது கிராமம். என்னுடைய வீடு பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகாமையில் அமைந்து இருந்தது. எனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதி பராக்கிரம சமுத்திரத்தை ஒட்டிய கால்வாய்களுடன் கழிந்தது. எனது தந்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர் ஆவார். அம்மா வேலைகளில் ஈடுபடவில்லை.  நான் பொலன்னறுவை றோயல் மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை படித்தேன்.

நான் நல்ல நீச்சல் வீரன். நான் அகில இலங்கை நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டேன். மாணவர் தலைவராக தலைமைத்துவத்தை ஆரம்பித்தேன். அறநெறி பள்ளியில் தம்ம அறிவு, கவிதை, பேச்சுப் போட்டிகளுக்குச் சென்றேன். ஒரு தலைவராக அதைத் தாண்டி முன்னேறுவது எப்படி என்பதை அங்கிருந்து கற்றுக் கொள்ள உத்வேகம் பெற்றேன்.

சிறு வயதிலிருந்தே நிரோஷ் இந்துனில் என்ற கதாபாத்திரத்தை மாற்றத்தை விரும்பும் ஒருவராக நான் அடையாளம் கண்டுகொண்டேன். இந்த உலகில் மாற்றத்தை விரும்புபவர்கள்  மாற்றத்தை உருவாக்கி அவர்களுடைய பெயர்களை இவ்வுலகில் விட்டுச்சென்றுள்ளார்கள். நான் பணிபுரிந்த நிறுவனங்களில் இருந்து பெற்ற அனுபவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினேன். நான் ஒரே இடத்தில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை.

இன்று, நான் செய்த மாற்றத்தாலும், பள்ளியில் பெற்ற கல்வியாலும், அன்னை பிராண்டிக்ஸிடமிருந்து பல சலுகைகளைப் பெற்றுள்ளேன். எனது மனைவி மகாவலி அதிகாரசபையில் பணிபுரிகிறார். நான் வார இறுதி நாட்களில் வீட்டிற்கு செல்கிறேன். ஒரு மனைவியாக, என் குழந்தைகளுடன் சேர்ந்து மற்ற வேலைகளை கவனிப்பதே எனது மிகப்பெரிய பலம். பிராண்டிக்ஸ் அன்னைக்கு இவ்வாறு சேவையாற்ற எனக்கு ஆதரவை வழங்கியது எனது மனைவியின் பலம் ஆகும்.

பிராண்டிக்ஸில் தரக் கண்காணிப்பாளராக இணைந்து துணைப் பொது மேலாளர் வரை தரம் உயர முடிந்தது, இந்  நிறுவனம் எம்மை ஒரே இடத்திற்கு மட்டுப்படுத்தாமல் இருந்ததனால் ஆகும். நாம் பிறந்த இடத்தில் இறக்க வேண்டும் என்பது தவறு. எமக்கு மாற்றத்தை ஏற்றப்படுத்த முடியாது என்று சிந்தித்தால், நாம் பிறந்தது போன்றே இறந்து போனால் அது எம்முடைய தவறு. நான் அனைத்து பிராண்டிக்ஸ் உறுப்பினர்களுடனும் கேட்டுக்கொள்வது என்னவென்றால் உள்ளத்தால் உணர்ந்து  ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம், அன்னை பிராண்டிக்ஸை மேம்படுத்துவோம், நம் வாழ்க்கையை வெற்றியடையச் செய்வோம் என்று.

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *