பெண்

சாதனைகளோடு சரித்திரம் படைத்த
கடவுளால் படைக்கப்பட்ட
கற்பக விருட்சம்தான் – பெண் !

ஈரைந்து திங்கள் – தன்
கருவறையில் பத்திரமாய்ச் சுமந்து
பத்தும் பறக்க
உச்ச எல்லை தாண்டி – தன்
உதிரத்தை தானம் வடித்து
மானிடத்தை ஈன்றெடுத்து
உலகை உருவாக்கினால்
அன்னை எனும் – பெண் !

இவ்வுலகை சுமந்து
சுமை காத்து வருபவளும்
புஉமாதேவியென எண்ணி- தினம்
வர்க்க உணர்வு பூண்டு
யாத்திலும் பொறுமை காப்பது
பெண்ணின் பேரழகு!

அன்பு எனும் பாசக் கயிற்றால்
முடி புனைந்து- தினமும்
உடல் உள ஆரோக்கியத்துடன்
நல்லறிவு புகட்டுவதுடன் – நற்
பாதையினைக் காண்பித்து – எம்மை

வாழக் கற்றுக் கொடுப்பதும் பெண்ணினமே!

சூரியன் இன்றி – பூமி
சுழல்வதில்லை
பெண்கள் இன்றி – இவ்வுலகம்
இயங்குவதில்லை
நாள்தோறும் சக்கரம்போல்
சுழன்று நின்று கன்னியமாய்ப்
பணி புரியும் பெண்ணினமே
வாழ்க ! வளர்க ! வளமுடன் !

கி.தனுர்ஷிக்கா
பிராண்டிக்ஸ் மட்டக்களப்பு நிறுவனம்

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *