இம்முறை வியமன் தொலைக்காட்சியானது “ஆயத்தனயக்க கதாவ” (“ஒரு நிறுவனத்தின் கதை”) மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க அதுகல்புரத்தில் (குருநாகலில்) உள்ள பிரண்டிக்ஸ் ரிதீகமவின் கதையை உங்களுக்குக் கொண்டு வருகிறது.
பிரண்டிக்ஸ் ரிதீகம ஏப்ரல் 17, 2011 அன்று பிரண்டிக்ஸ் கேஷுவல் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 300 உறுப்பினர்களுடன் தொடங்கிய இந்த நிறுவனத்தில் தற்போது 1,100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், 2021 இன் பிற்பகுதியில் ஒரு கட்டிடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், பிராண்டிக்ஸ் ரிதீகமவிற்கு ஒரு மாபெரும் அடியை முன்னெடுத்து வைக்க முடிந்தது.
8 வருடங்களாக, பிரண்டிகஸின் மகிழ்ச்சியான நிறுவனங்களில் ஒன்றாக பிராண்டிக்ஸ் ரிதீகம தெரிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக பிரண்டிக்ஸ் ரிதீகம நிறுவனம் தற்பொழுது மேலும் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது.
பிரண்டிக்ஸ் ரிதீகமவின் மனிதாபிமானக் கொள்கையின் கீழ் மாதிரிக் கிராமங்களுக்கான 51 திட்டங்களை ஏற்கனவே நிறைவு செய்துள்ளதுடன், பாடசாலைகள், கோவில்கள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
160 க்கும் மேற்பட்ட நீர் திட்டங்கள் மூலம் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்கி மனிதகுலத்தை மேம்படுத்துவதுடன், பிரண்டிக்ஸ் ரிதீகம அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து பலப்படுத்தி முன்னேறும் ஒரு நிறுவனம் ஆகும்.