"உங்கள் கனவுகளை கை விட வேண்டாம்"

“பல நாள் வரட்ச்சியின் பிறகு ஒரு நாள் மழை பெய்யும்” என்ற முதுமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வறட்சியால் வாடும் நிலத்தின் உயிர்நாடி மழை. மேலும் நம் வாழ்வில் கூட வறட்சி ஏற்படலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும், கைவிடாமல் இருக்க வேண்டும். வியமன் தொலைக்காட்சியின் ‘விழித்தெழுந்த வாழ்வு’ நிகழ்ச்சியில் இது பற்றி பேசுவதற்கு பிராண்டிக்ஸ் வந்துபிட்டிவலை  சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் திருமதி நதீரா பிரசன்ஷனி இம்முறை எங்களுடன் இணைந்தார்.

“ஏப்ரல் வரை புத்தாண்டைக் கொண்டாட நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இரண்டு ஆண்டுகளாக தொற்றுநோய் காரணமாக புத்தாண்டைக் கொண்டாடுவது எங்களுக்கு சிரமமாக இருந்தது. தொற்றுநோய் முன்பை விட சற்று குறைவாக இருந்தாலும், இன்னும் வேறு சில சிக்கல்கள் இருந்த வண்ணம் உள்ளன. இது நம்மை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இது தொடர்பாக சிலர் விவாதங்களில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். இதனால் மேலும் சிக்கல்கள் உருவாக்குகின்றன. எமது வீட்டின் நிலமை வேறு யாருக்கும் தெரியாது, வேறு யாருடைய நிலமையும் நமக்குத் தெரியாது. இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் கோபத்தை சமாளிக்க முடிந்தால், அது மதிப்புக்குரியது. இந்த வருடத்தை நமக்குள் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாமல் கொண்டாடினால் அது மதிப்புக்குரியதாக இருக்கும்.

இந்த சூழ்நிலையை வீட்டிலும் சமாளிக்க வேண்டும். இதுவரை உங்கள் மனைவிக்கு நீங்கள் உதவி செய்யவில்லை என்றால், இப்போது கொஞ்சம் உதவுங்கள். தன்னுடைய கணவன் பெரிய கனவுகளைக் கொண்டிருக்கலாம். அங்கு செல்வது அவருக்கு கடினமாக இருந்தால், அவரிடம் மனம்விட்டு பேசுங்கள். ஒரு குடும்பமாக நாங்கள் எங்கள் குடும்பத்திற்குள் மிகவும் வலுவாக இருக்க இது ஒரு வாய்ப்பு. மேலும், சிலர் தங்கள் கனவுகளுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இப்போது இதை செய்ய முடியாது, இதை செய்தாலும் பயனில்லை என்ற நிலைக்கு சிலர் வந்துவிட்டனர். உண்மை நிலவரம் பற்றி பேசினால், இரண்டு வருடத்தில் வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்ற திட்டம் இருந்திருந்தால், தற்போதைய சூழ்நிலையில் அதை செய்ய முடியாது. ஆனால் ஒரு நாள் நீங்கள் யோசிக்கலாம் நான் ஏன் அன்று என் கனவினை அடைவதை நிறுத்தினேன் என்று, கொஞ்சமாவது தியாகம் செய்து அந்தச் சூழலை சமாளித்து இருந்தால், ஒரு நாள் எனது  கனவினை அடைந்திருக்கலாம் என்று. இரண்டு வருடங்களில் செய்ய வேண்டியதனை  மூன்று வருடங்கள் செய்திருக்கலாம். அப்போது நீங்கள் ஒரு நாள் உங்கள் கனவினை அடைந்திருப்பீர்கள். எனவே உங்களின் கனவுகளை விட்டுவிடாதீர்கள். கனவுகளை விட்டுக் கொடுத்தால் தான் தோற்றுப்போவீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் கனவுகளை கைவிடவில்லை என்றால், ஒரு நாள் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *