சீதாவக பிரதேசத்தின் பெருமையினை மெருகேற்றும் பிராண்டிக்ஸ் நாமம்

வியமன் தொலைக்காட்சியின் “ஒரு நிறுவனத்தின் கதை” / “ஆயத்தநயக்க கதாவக்”    நிகழ்ச்சியின் மூலம் சீதாவக பிரதேசத்தில் பெருமையுடன் பரிணமித்த பிராண்டிக்ஸ் அவிசாவளை நிறுவனத்தின் கதையை இம்முறை உங்களுக்காகக் கொண்டு வருகிறோம்.

சீதாவக முதலீட்டு வலயத்தை அடிப்படையாகக் கொண்டு, பிராண்டிக்ஸ் அவிசாவளை நிறுவனம் 1999 இல் நிறுவப்பட்டது. பின்னர்  மார்ச் 2000 இல் அதன் தற்போதைய இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. நிறுவனத்தின் இடமாற்றத்துடன், பிராண்டிக்ஸ் அவிசாவளை நிறுவனம் Phoenix Clothing என்ற புதிய பெயரில் புதிய தோற்றத்துடன் தனது பயணத்தை ஆரம்பிக்க முடிந்தது. முதலில் Brandix Casual Wear Cluster உடன் இணைந்த நிறுவனம், 2015 இல் Fast Fashion Cluster எனப் பெயர் மாற்றப்பட்டது.

உலகிற்கு புதுமையான தீர்வுகளை வழங்கி வெற்றிப் பாதையில் பயணித்து வந்த பிராண்டிக்ஸ் அவிசாவளை நிறுவனத்திற்கு 2009ம் ஆண்டு  ஒரு சிறப்பான ஆண்டாகும். ஏனென்றால், நிறுவனத்தில் 5S முறை நிறுவப்பட்ட பிறகு, நிறுவனம் தேசிய 5S தங்க விருதை வெல்ல முடிந்ததால் ஆகும். மேலும், Brandix Mercury Festival இல் பல்வேறு நிகழ்வுகளில் பிராண்டிக்ஸ் அவிசாவளை நிறுவனம் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. Mercury Festivalவிழாவில், நட்சத்திர நடனக் கலைஞர் போட்டியில் மூன்று முறை முதல் இடத்தையும், இரண்டு முறை இரண்டாம் இடத்தையும் வென்றுள்ளது.

20 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் தற்போது 2000 பேர் பணிபுரிகின்றனர். பிராண்டிக்ஸ் அவிசாவளை தனது உறுப்பினர்களின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு சமூக பணிகளின் மூலம் தீர்வுகளை வழங்கி, பிரதேசத்திலுள்ள பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சுகாதாரம் மற்றும் நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சீதாவக்க பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் நிறுவனமாகும்.