உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதேனும் ஒருவர் கேட்டதற்காக அல்லது சொன்னதற்காக உங்கள் மனம் புண்பட்டிருக்கக் கூடும். மேலும் சில சமயங்களில் வேறு யாரையாவது காயப்படுத்துகிறதா இல்லையா என்று கூட யோசிக்காமல் நாம் கேள்விகள் கேட்கும் நேரங்களும் உண்டு. இது போன்ற விஷயங்கள் மூலம் நட்பை இழக்கக் கூட நேரிடும். எனவே ஒரு விடயம் பற்றி பேசுவதற்கு முன் சிந்திப்பது புத்திசாலித்தனம் ஆகும். வியமன் தொலைக்காட்சியின் ‘விழித்தெழுந்த வாழ்வு’ நிகழ்ச்சியில் இது பற்றி பேசுவதற்கு பிராண்டிக்ஸ் வந்துபிட்டிவள நிறுவனத்தின் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் திருமதி நதீரா பிரசன்ஷனி இம்முறை எங்களுடன் இணைந்தார்.
“சில சமயங்களில் நாம் கேட்பதும், யோசிக்காமல் பேசுவதும் சிலர் மனதை காயப்படுத்தலாம். பெரும்பாலும் முப்பது வயதுக்கு மேல் இருக்கும் ஒருவரைப் பார்க்கும்போது, நீங்கள் திருமணம் செய்துகொள்கிறீர்களா இல்லையா என்று சில கேள்விகளைக் கேட்போம். மிக முக்கியமான பிரச்சினை காரணமாக அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கலாம். மேலும், ஒருவர் திருமணம் செய்துகொண்டால், அவரிடம் நாம் கேட்கும் கேள்வி, உங்களுக்கு ஏன் குழந்தை இல்லை, ஏன் இன்னும் குழந்தை இல்லை என்பதுதான். இப்படி ஒரு கேள்வியைக் கேட்கும் முன், முடிந்தால், ‘இந்தக் கேள்வி அந்த நபரைக் காயப்படுத்துமா’ என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமேயானால், நம் வார்த்தையால் இன்னொருவரின் மனம் புண்படுவதைத் தடுக்கலாம் என்று நினைக்கிறேன். திருமணம் ஆனதால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. குழந்தை பெற்றுக்கொள்வது எப்போது என்பதை முடிவு செய்யும் உரிமை எமக்கு உண்டு. மற்றொன்று, இது மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் மிகவும் தனிப்பட்ட விஷயம் ஆகும்.
ஒருவரைப் பார்த்தவுடனே அவரிடம் நீங்கள் பருமனாக இருக்கிறீர்கள், நிறைய சாப்பிடுகிறீர்களா; என்று சொல்வோம், ஒல்லியாக இருப்பவரைக் கண்டால் ஏன் சாப்பிடுவதில்லை என்று கேட்கிறோம். இப்படி நாம் கேட்பது அவர்கள் மனதை புண்படுத்தும். எனவே ஒருவரின் மனம் புண்படாமல் பேசுங்கள். குறிப்பாக இது போன்ற நேரத்தில் ஒரு வார்த்தையால் இன்னொருவரின் மனதை சீர்செய்ய முடிந்தால், இன்னொருவருக்கு கொஞ்சம் சந்தோஷத்தை கொடுக்க முடிந்தால், அதுவே நம்மால் செய்யக்கூடிய மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். எனவே இன்னொருவரின் மனதை புண்படுத்தும் விதமாக ஏதேனும் கேட்பதற்கு முன், அது உங்களிடம் யாரவது கேட்டல் உங்கள் மனம் எவ்வாறு இருக்கும் என்று சிந்தியுங்கள். அவ்வாறு சிந்தித்தல் யார் மனதையும் காயப்படுத்தும் விதமாக நீங்கள் ஒருபோதும் கேள்வி கேட்க மாட்டீர்கள்.”