தைரியத்துடனும் பலத்துடனும் மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் பிராண்டிக்ஸ் மீரிகம

கம்பஹா மாவட்டத்தில் விவசாயத்தால் செழிப்பான அழகிய பிரதேசத்தில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் மீரிகம தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் ஒரு நிறுவனம் ஆகும். இம்முறை “வியமன்” தொலைக்காட்சியானது தனது “ஒரு நிறுவனத்தின் கதை” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிராண்டிக்ஸ் மீரிகமவின் கதையை உங்களுக்குக் கொண்டுவருகிறது.

மீரிகம பிரதேசத்தில் மிகப்பெரிய தொழில்வாய்ப்பை உருவாக்கும் ஆடை நிறுவனமாக அப்பிரதேசத்தில் பெரும் சக்தியாக இருந்து வரும் பிராண்டிக்ஸ் மீரிகம நிறுவனம், லோலுவாகொட ஏற்றுமதி அபிவிருத்தி வலயத்தில் முன்னணியில் உள்ளது. நிறுவனத்தில் உள்ள ஆற்றல் மிக்க உறுப்பினர்கள் தங்கள் திறமைகளை, பிராண்டிக்ஸ் இளவரச இளவரசிகளின் முதன்மை விழாவான “பிராண்டிக்ஸ் ரசதிய மங்கல்ய” விழாவில் வெளிப்படுத்தி தங்கள் நிறுவனத்திற்கு பெருமையினை மெருகேற்றி உள்ளர்கள். பிராண்டிக்ஸ் மீரிகம தனது உறுப்பினர்களின் திறமைகளை வெளிக்காட்டி அவர்களுக்கு நட்புறவான பணிச்சூழலை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை உருவாக்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

பிராண்டிக்ஸ் மீரிகம என்பது சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் நாட்டிற்கான தனது பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் பசுமை நிலைத்தன்மை மற்றும் மனிதாபிமானத்தின் மூலம் உலகை மேம்படுத்த செயல்படும் ஒரு நிறுவனமாகும்.