பிராண்டிக்ஸ் என்பது விழித்தெழுந்த தீர்வுகளை உலகிற்கு முன்மொழிவதை போன்றே விழித்தெழுந்த மக்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை ஒரு புதிய திசையில் கொண்டு செல்லும் ஒரு வளாகம் ஆகும். பிராண்டிக்ஸில் பணிபுரியும் எவரும் தங்கள் தொழில் வாழ்க்கையைத் தாண்டி தாங்கள் விரும்பும் பாத்திரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. இம்முறை வியமன் தொலைக்காட்சியின் “விழித்தெழுந்த நாம்” நிகழ்ச்சியில் அப்படியொரு கதாபாத்திரம் உங்கள் முன் தோன்ற உள்ளார். அவர் பிராண்டிக்ஸ் மீரிகம மனிதவள நிர்வாக அதிகாரி புத்திகா காரியவசம் ஆவார்.
“நான் வேலை தேடி பிராண்டிக்ஸ் மீரிகமவுக்கு வந்த என்னை, ஒரு தொகுப்பாளராகவும் எழுத்தாளராகவும் வருவதற்கு வழிவகுத்தது பிராண்டிக்ஸ் மீரிகம நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் மூலம் தான் எனது வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெற முடிந்தது. ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த விழித்தெழுந்தவர்களைக் கொண்ட எங்கள் நிறுவனத்தின் மூலம் நான் எனது வாழ்க்கையை நடத்துகிறேன். இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலமாகவே எனது தொழில் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றிபெற முடிந்தது.
பாடசாலையில் பேச்சுப் போட்டியில் பங்கேற்று, பேச்சுத்திறனை வளர்த்துக்கொண்ட நான், அறிவிப்பாளராக வருவேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால் பிராண்டிக்ஸ் எங்கள் நிறுவனத்திற்குள் அந்த திறமையை வெளிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்கியது. அதன் அடிப்படையில் இருந்துதான் 2018ம் ஆண்டின் “ரசதிய” அறிவிப்பு நட்சத்திரமாக வெற்றி பெற முடிந்தது.
ஒரு வேலையைச் செய்துகொண்டே எழுத்தாளனாக வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் பிராண்டிக்ஸில் அதைச் செய்வதற்கான வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அது வியமன் இதழின் மூலம் ஆகும். வியமன் இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவதால், வியமன் குழு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள நான் எதிர்பார்க்காத வகையில் வியமன் ஆசிரியர் குழுவில் இடம்பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
மனிதவளத் துறையில் பயிற்சி பெறாத உறுப்பினராகச் இணைந்த எனக்கு, இந்த நிறுவனத்தின் மூலம் தொழில் அனுபவமுள்ள நபராக மாற முடிந்தது. வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்துள்ள ஒரு இடமாகும். சவால்களை சமாளிக்கும் வலிமை நம் அனைவருக்கும் உள்ளது. அந்த ஆற்றலை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். நீங்களும் ஒரு விழித்தெழுந்த மனிதனாக வாழ்க்கையை வெல்லலாம்.”