அழகான நெசவிற்கு நிவிதிகலையின் பெருமை

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவிதிகலை பிரதேச செயலர் பிரிவில் கிரிபத்கல மலையின் அடிவாரத்தின் எழில் மிகு பிரதேசத்தில் அமைந்துள்ள நிவிதிகலை பிராண்டிக்ஸ் நிறுவனம் பற்றிய கதையை இம்முறை வியமன் TV யின் “நிறுவனத்தின் கதை” நிகழ்ச்சியின் மூலம்  உங்களிடம் கொண்டு வரப்படுகிறது.

1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 2008 ஆம் ஆண்டு பிராண்டிக்ஸ் எனப் பெயர் மாற்றப்பட்டு, தற்போது வரை வெற்றிகரமாகப் பயணித்து வருகின்றது. இப்பிரதேசத்திற்கு  பெருமை சேர்க்கும்  பிராண்டிக்ஸ் நிவிதிகலை  நிறுவனத்தில் தற்பொழுது 1,400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தில் பணிபுரியும் பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்கள் நிறுவனத்தைச் சுற்றியுள்ள உள்ளூர்வாசிகள் மற்றும் பிராண்டிக்ஸ் நிவிதிகலை  நிறுவனம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும் பங்களிப்பை  செய்து வருகிறது.

பிராண்டிக்ஸ் குழுமம் எப்பொழுதும் நாட்டின் குடிமக்களுக்கான தனது கடமைகளை மனிதாபிமானத்தின் மூலம் நிறைவேற்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுகிறது. அதன்படி, பிராண்டிக்ஸ் நிவிதிகலை  நிறுவனம், இதுவரை 134 மனிதாபிமான செயற்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

இக்கட்டான காலங்களிலும் கூட, பிரண்டிக்ஸ் நிவித்திகல, உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளது. பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி, உறுப்பினர்களை தொழிலில் முன்னேற ஊக்குவித்ததற்காகவும் அவர்களும் முழு மனதுடன் நினைவுகூருகிறார்கள்.