பூமித்தாயை பாதுகாத்து நாளைய உலகை உருவாக்குவோம்

இயற்கை என்ற அற்புதம் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் கொடுக்கிறது. குறிப்பாக மனிதர்கள் அதிக அளவு இயற்கை வளங்களை உபயோகிக்கிறார்கள். இயற்கை என்று எண்ணும்பொழுது மரம், கொடிகள் ஞாபகத்திற்கு வந்தாலும் பெட்ரோலியம், சூரிய சக்தி போன்றவையும் இயற்கையின் கொடைகளே. இந்த வளங்கள் அனைத்தையும் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் உலக பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று கொண்டாடப்படுகிறது.

பிராண்டிக்ஸ் சுமார் 15 ஆண்டுகளாக இயற்கையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 2007 இல் ஆரம்பமாகிய பசுமை நிலைத்தன்மை பயணத்தில் ஒரு சிறப்பு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2008 இல், பிராண்டிக்ஸ் சீதுவ நிறுவனம், லீட் பிளாட்டினம் விருதைப் பெற்ற ஆடைத் துறையில் முதல் நிறுவனமாக மாறியது. இந்த பதினைந்து வருட பயணத்தில், வருங்கால சந்ததியினருக்கு பசுமை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிராண்டிக்ஸ் பணியாற்றியுள்ளது. பிராண்டிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து மரம் நடும் திட்டம் ஒன்றை  செயல்படுத்தியது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் 3,000 மரக்கன்றுகளை நடும் இத்திட்டம் எதிர்கால சந்ததியினருக்கு மதிப்புமிக்க பரிசாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிராண்டிக்ஸ் குழுமம் 2023 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளிப்பாடு முற்றிலும் இல்லாத நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலையான வளர்ச்சியின் மூலம் உலகிற்கு விழித்தெழுந்த தீர்வுகளை வழங்குவதன் மூலம் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவது பிராண்டிக்ஸ் எமது நோக்கம் ஆகும்.

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *