அனுஷ்க குனசோம எனும் படைப்பாளி பிறப்பிலேயே உருவாக்கப்பட்டவர். ஏனென்றால் பிறப்பிலேயே அவரிடம் இருந்த திறமைகள் தான் இவ்வாறு ஒரு படைப்பாளி உருவாவதற்கான காரணம் என்று நான் நினைக்கின்றேன் .
இவ்வாறு வியமன் TVயில் தனது குரலை எழுப்பியது, பிராண்டிக்ஸ் நிறுவன பாடல் உட்பட பல பாடல்களை உருவாக்கிய பிராண்டிக்ஸ் குழும தொடர்பாடல் சிரேஷ்ட முகாமையாளர் திரு.அனுஷ்க குணசோம அவர்கள். கலைச் சிந்தனைகளை ஆக்கப்பூர்வமாகக் கையாள்வதும், பாடலாக மாற்றுவதும் எளிதான விடயமல்ல. அதுபோலவே உருவாக்கும் பாடல்கல் பிரபலத்தின் உச்ச நிலைக்குச் சென்று ரசிகர்கள் அரவணைக்கும் நிலைக்கு வருவது ஒரு படைப்பாளிக்குக் கிடைத்த மாபெரும் சாதனை ஆகும். படைப்பாற்றலுடன் பிறந்த அவர், கலைத்துறையில் எப்படி நுழைந்தார், அவர் எழுதிய பாடல்கள் குறித்து பின்வருமாறு கூறினார்.
“ஓவியங்கள் வரைவதில் தான் எனது கலைத் திறமை இருந்தது. பாடல்கள் எழுதப் கற்றுக்கொண்டேன். இப்படித்தான் கலை துறையில் வாழ்க்கை முன்னேறியது. வீடியோக்களாக விளம்பரங்களை தயாரிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக பல்கலைக்கழகத்தின் செயல்திட்டத்திற்க்காக விளம்பரங்களை உருவாக்கினோம்.
“வன் பிராண்டிக்ஸ்” பாடல் தான் உறுப்பினர்களின் மனம் கவர்ந்த, ஏற்றுக்கொண்ட பாடல் ஆகும். “ஊசி முனையில் பெருமை” இந்தப் பாடலுக்கு அன்றும் இன்றும் என் மனதில் தனி இடம் உண்டு. நிறுவனத்திற்குள் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல்களைப் பற்றி நாம் பேசினால், இந்த பாடல்கள் உருவாவதற்கான உத்வேகம் பிராண்டிக்ஸ் நிறுவனத்தில் இருந்தே வருகிறது.
“ஆயே மா தனி வீலா” பாடல் வெளியான போது மக்கள் மத்தியில் வெகுதூரம் சென்றடைந்த பாடல். இது மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. “சியும் ஹமுவீமாக்” இது மிகவும் எளிமையான, திடீர் உணர்வைப் பற்றியது. இதயத்தில் கூச்சப்படும் காதல் ஆசைகளின் மறுமலர்ச்சி பற்றி இது கூறப்படுகிறது. ஆனால் அது பூக்காத பூ போன்றது. எழுதப்படாத கவிதை போல மறைந்து விடுகிறது. பாடல்களை நான் எழுதியிருந்தாலும், அந்த பாடல்கள் பிராண்டிக்ஸ் நிறுவனம் மூலம் வெளிவருகின்றன. அந்த நிறுவனம்தான் எனக்கு பலமாக உள்ளது’’ என்றார்.