விழித்தெழுந்த தீர்வுகள் மூலம் ஆடைத் துறையை வென்ற பிராண்டிக்ஸ், அந்தச் செயல்பாடுகளுக்கு அப்பால் சென்று நாட்டிற்கு உறுதுணையாகும் ஒரு நிறுவனமாகும். இப் பெருமைக்குரிய பிராண்டிக்ஸ் குடும்பத்தின் புத்தம் புதிய செய்யலத்திட்டம் தான் விவசாய புரட்சி. நாட்டிற்கான மனிதாபிமான முயற்சிகளின் அறுவடையான விவசாயப் புரட்சி, எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவுப் பிரச்சினைக்குத் தீர்வாகவும், எமது சொந்த மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் உன்னத இலக்குகளை முன்மொழிந்தே ஆரம்பிக்கப்படுகிறது.
இங்கு 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் விவசாய பணிகள் நடைபெற உள்ளது.நாட்டை வளமாக்கும் இந்தத் திட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து விவசாய திட்டம் செயல்படுத்தப்பட்டு, அங்கு விவசாயிகளுக்கு பயிரிடுவதற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து பயிர்ச் செய்கை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைக்காக எங்கள் உறுப்பினர்களுக்கு விதைகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் உதவியை வழங்குவது இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மற்றொரு தொண்டாகும்.
நாட்டுக்கான இந்த மனிதாபிமானப் பணியின் அறுவடைக்காக அரச நிறுவனங்கள் எம்முடன் இணைந்து செயற்படுவது போன்று தனியார் துறை நிறுவனங்களும் எதிர்காலத்தில் எம்முடன் இணைந்து செயற்படவுள்ளன. அதுமட்டுமின்றி விவசாயம் தொடர்பான துறைசார் நிபுணத்துவம் பெற்ற வளவாளர்களும் எம்முடன் இணைந்து செயல்படுகின்றனர். எமது நாட்டு மக்களின் நீண்ட கால வேலை வாய்ப்புகளையும் கூடுதல் வருமானத்தையும் உருவாக்குவதன் மூலம் வளமான எதிர்கால பலன்களை அறுவடை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு இந்த விலைமதிப்பற்ற மனிதநேய தொண்டின் மூலம் ஈடுசெய்யப்படுகிறது.