வாழ்க்கையில் சில சமயங்களில் வெவ்வேறு முடிவுகளை எடுக்க எமக்கு நேரிடும். அந்த சமயங்களில் சரியான முடிவுகளை எடுக்க எம்மால் முடிந்தால், எமது இலக்குகளை அடைவதற்கான சரியான வழியை வாழ்க்கை காட்டும். இம்முறை, வியமன் TVயின் “ஹந்துநாகத்தொத் ஒப மா” / “நீங்கள் என்னை அறிந்தால்” நிகழ்ச்சியானது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து தனது வாழ்க்கையை வென்ற பிராண்டிக்ஸ் மீரிகம நிறுவனத்தின் மனிதவள முகாமையாளர் திரு.ஷஷி ராஜபக்ஷவுக்காக ஒதுக்கப்பட்டது.
“வைத்தியர் ஆக வேண்டும் என்ற கனவு தான் சிறுவயதில் இருந்தே இருந்தது. அதற்காக பாடுபட்டு சாதாரண தரத்தில் சிறப்பாக சித்திபெற்றேன். உயிரியலில் பிரிவில் உயர்தர படிப்பை மேற்கொள்ள நினைத்து வகுப்புகளுக்குச் சென்றபோது தான் எனக்கு தோன்றியது, இதனை என்னால் குறைவாக தான் புரிந்துகொள்ள முடிகிறது என உணர்ந்தேன். வாழ்க்கையில் முடிவெடுக்க இதுவும் ஒரு சந்தர்ப்பம். அதன் பிறகு வர்த்தக பிரிவில் முன்னோக்கி செல்ல முடிவு செய்தேன். நான் வணிகவியலில் சிறந்த புள்ளிகளுடன் களனி பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றேன்.
நான் மனிதவள துறையில் தொடர முடிவு செய்தேன். இதற்கு புத்தக அறிவு மட்டும் போதாது, நடைமுறை அறிவும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். நான் பிராண்டிக்ஸ் ஏகல நிறுவனத்தின் பயிற்சியாளராக இணைந்தேன். அப்போதிருந்து, பிராண்டிக்ஸ் உடனான பயணத்தில் முன்னேறி வந்தவர்களில் நானும் ஒருவன். பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பின்னர், பிராண்டிக்ஸ் வெலிசர நிறுவனத்தில் அதிகாரியாகச் இணைந்தேன். பின்னர் மேலாளர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று அவிசாவளை 01 இல் இணைந்தேன். நான் சிரேஷ்ட மேலாளர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று பிராண்டிக்ஸ் மீரிகம 02க்கு வந்தேன். அதன் பிறகு, உதவி மனிதவள முகாமையாளராக பதவி உயர்வு பெற்றேன். இந்த வருடம் நான் மனிதவள முகாமையாளராக பதவி உயர்வு பெற்றேன்.
உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஒரு இலக்கை நோக்கி செயல்படுங்கள். முடிவுகளை எடுக்கும்பொழுது சரியான முடிவுகளை எடுங்கள். சரியான சமயத்தில் சரியான முடிவுகளை எடுத்தமையால் எனது வாழ்க்கையை வெல்லும் திறன் எனக்கு கிடைத்தது.”