இன்று சர்வதேச சைகை மொழி தினம் ஆகும்

உலகில் வாய்மொழித் தொடர்புக்காக மொழி உருவாவதற்கு முன்பு, சைகைகளை பயன்படுத்தி தொடர்பாடல் இடம்பெற்றுள்ளது. தற்போது, ​​மொழிகள் மிகவும் முன்னேற்றமடைந்து  வாய்வழி தொடர்பாடல் செய்யப்படும் அதேவேளை சைகை மொழியும் மேம்பட்டுள்ளது. சைகை மொழி பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டு சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்காக உருவாகி வருகிறது.

பிராண்டிக்ஸ் குழுமம் என்பது அனைவரையும் சரிசமமாக நடத்துவதன் மூலம் தனது பயணத்தை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாகும். கிட்டத்தட்ட அனைத்து பிராண்டிக்ஸ் குழும நிறுவனங்களிலும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட உறுப்பினர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  மரியாதை எனும் பிரண்டிக்ஸின் மதிப்புகளைப் பின்பற்றி, உறுப்பினர்கள் அனைவரையும் சமமாக நடத்தும் பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் தங்கள் கடமைகளை மிகவும் சுதந்திரமாகவும் எளிதாகவும் இந்த உறுப்பினர்கள் செய்கிறார்கள். விசேட தேவையுடையவர்களும் ஏனைய உறுப்பினர்களைப் போன்று நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பது மிகவும் விசேடமான விடயமாகும்.

விழித்தெழுந்த மக்களுடன் புத்துணர்ச்சியூட்டும் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரண்டிக்ஸ் , விசேட தேவையுடைய உறுப்பினர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி, ஈர்க்கப்பட்ட தீர்வுகளையும் நிறுவனத்தில் வழங்கியுள்ளது. சைகை மொழியில் பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர்கள், முகாமையாளர்கள்  பணியமர்த்தப்பட்டுள்ளனர் மற்றும் பிராண்டிக்ஸ் நிறுவனங்களில் சைகை மொழியினை மொழிபெயர்க்க பயிற்சி பெற்ற உறுப்பினர்களும் உள்ளனர். மேலும், சைகை மொழியைப் பயன்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளபிராண்டிக்ஸ் நிறுவனங்களில், அவர்களுக்கு வீடியோ தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள இலவச வைஃபை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

சைகை மொழியைப் பயன்படுத்துபவர்களுக்கும் உங்களால் குரல் கொடுக்க முடிந்தால், அது தொடர்பாக அறிந்து இருங்கள்.

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *