சிறுவர்கள் பூக்கள் போன்றவர்கள். நூறு குழந்தைகளை எடுத்துக் கொண்டால், அந்த நூறு குழந்தைகளும் உலகை வெவ்வேறு வழிகளில் சிந்திக்கிறார்கள், பார்க்கிறார்கள். சரியாக இந்த உலகின் உள்ள வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் பல்வேறு வாசனைகளுடன் கூடிய மலர்களைப் போலவே. பூக்கள் நிறைந்த பூந்தோட்டம் போன்றது அந்தச் சிறியவர்களின் உலகம். குழந்தைகளின் உலகம் மிகவும் தூய்மையானது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை கூறினார், “ஒரு குழந்தை என்பது ஒரு வயது வந்தவரின் சிறிய மாதிரி வடிவம் அல்ல.” பெரியவர்களாகிய நாம், நமது வயது வந்தோருக்கான கருத்துக்களையும் மனப்பான்மையையும் அவர்களின் உலகில் அறிமுகப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் குழந்தைப் பருவத்தை வண்ணமயமாக்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் சொந்த உலகில் நல்லது மற்றும் கெட்டதைப் புரிந்துகொள்வதன் மூலம் அவர்கள் கற்றுக்கொள்ள அனுமதிப்பதன் மூலம், ஒரு படைப்பாற்றல் நிறைந்த சிறந்த குழந்தை உருவாக இடமளிக்க வேண்டும். பெரியவர்களாகிய எமக்கு அவர்களுக்கு வழிகாட்ட முடியும்.
குழந்தைகள் உண்மையானவர்கள். ஆயிரமாயிரம் கடமைகளுக்கு நடுவில் இருந்தாலும் பெரியவர்கள் கூட ஒரு சிறு குழந்தையின் முன் சிரித்துப் பேசி நிதானமாகப் பேசுவது அவர்களின் உண்மைத் தன்மையால்தான். பெரியவர்களாகிய நாம் குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களுக்குப் பின்னால் நிற்க வேண்டும். சில பெரியவர்கள் குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை. இது குழந்தையின் ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறனை அழிக்கிறது. எனவே அவர்கள் தங்கள் உலகில் உலகத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்று கேள்வி எழுப்பட்டும். அந்த நேரத்தில், நீங்களும் குழந்தையுடன் குழந்தையின் உலகில் நுழைந்து அவர்களுக்கு வழிகாட்டுகிறீர்கள். நாளைய நாட்டின் எதிர்காலத்தை கையகப்படுத்தும் சிறந்த குழந்தைகளை உருவாக்க, குழந்தைகளின் உலகின் இனிமையை அவர்கள் சுதந்திரமாக அனுபவிக்க அனுமதிக்க வேண்டும்.
குழந்தைகளின் எதிர்காலத்தை மலர்களைப் போல அழகாக மாற்றுவது நமது பொறுப்பு என்பதால் பிரண்டிக்ஸில் குழந்தைகளுக்காக பல்வேறு செயல்பாடுகளையும், திட்டங்களையும் உருவாக்கியுள்ளோம். பிராண்டிக்ஸில், துடிப்பான தலைமுறை என்பது துடிப்பான எதிர்காலம் என்பதை நாம் அறிவோம். ஏனென்றால் இன்று சிறு செடியாக வளரும் குழந்தைகள் தான் நாளை பெரும் விருட்சமாக வளர்ந்து இந்த சமுதாயத்திற்கு நிழலையும் வாழ்வையும் தருவார்கள். புன்னகை நிறைந்த அவர்களின் சொந்த உலகில் வளர குழந்தைகளை மேம்படுத்துவோம். அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உறுதிகொள்வோம் .