மனிதனுக்கு சேவை செய்வதே மனிதனின் கடமை ஆகும். உலகில் எங்கும் மனிதர்களாகிய எம் அனைவரும் சமமாக வளங்கள் பகிர்ந்தளிக்கப் படுவதில்லை. எனவே, இவ்வாறான சமயங்களில், மனிதநேயத்தின் பெயரால் மற்றவர்களுக்கு பலமாக இருக்கும் திறன் நமக்கு இருந்தால், அதுதான் உண்மையான மனிதநேயம் ஆகும். பிரண்டிக்ஸ் குழுமம் மனிதநேயம் நிறைந்த நிறுவனங்களை கொண்ட குழுமம் ஆகும். மனிதநேயம் எனும் கருப்பொருளை கொண்டு, இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவ பிரண்டிக்ஸ் பல ஆண்டுகளாக செயல்பட்டுள்ளது. மனிதநேயத்தின் கருத்தாக்கத்தின் ஒரு மாபெரும் அடித்தளம் தான் “பிரண்டிக்ஸ் மாதிரி கிராமங்கள்” திட்டமாகும். இத்திட்டத்தின் மற்றுமொரு கட்டத்தை குறிக்கும் வகையில், பிரண்டிக்ஸ் வத்துபிட்டிவல 03 நிறுவனத்தின் மூலம் குடிநீர் திட்டம் சமீபத்தில் மக்கள் மயமாக்கப்பட்டது.
நிட்டம்புவ ஸ்ரீ சங்கபோதி தேசிய பாடசாலைக்கு குழாய் கிணறு வழங்கியதன் மூலம் சுமார் மூவாயிரம் மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு பிரண்டிக்ஸ் வத்துபிட்டிவல நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. பல வருடங்களாக சுத்தமான குடிநீர் வசதியின்றி தவிக்கும் இவர்களுக்கு இந்த செயல்பாடானது மிகவும் பெறுமதியான சேவையாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மேற்படி திட்டத்தை மக்கள் மயமாக்குவதுடன், மனிதநேய பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டம்மும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களின் உயர் கல்விக்காக மனுதநேய பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பல ஆண்டுகளாக மனிதநேய செயல்பாடுகளை ஊக்குவித்து வரும் பிரண்டிக்ஸ், எதிர்காலத்தில் சமூகப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மனிதகுலத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க எதிர்பார்த்து உள்ளது.