நிராகரிக்கப்படுதல் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஏணியாகும்

வாழ்க்கை என்பது பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும். எல்லா விடயங்களும் நாம் விரும்பியபடி நடக்காவிட்டாலும், நடக்கும் விஷயங்களின் மூலம் வாழ்க்கையை நாம் விரும்பியபடி அமைத்துக் கொள்வது எம் கையில் தான் உள்ளது. நிராகரிக்கப்படுதல்  என்பது ஒரு நபர் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய மிகவும் வேதனையான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால் அந்த வலியை உங்களால் எதிர்கொள்ள முடிந்தால், உங்கள் வாழ்க்கையை நேர்மறையான திசையில் கொண்டு செல்லும் திறன் உங்களுக்கு உள்ளது. வியமன் தொலைக்காட்சியின் ‘பிபிதுனு திவியக்’ / “விழித்தெழுந்த வாழ்வு” நிகழ்ச்சியின் ஊடாக இது பற்றி பேசுவதற்கு பிராண்டிக்ஸ் வத்துப்பிட்டிவல நிறுவனத்தின் சிரேஷ்ட உளவியலாளர் நதீரா பிரஷன்சனி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார்.

“வாழ்க்கையில் ஜெயிக்க  நிராகரிப்புகள் நமக்கு உதவுமா என்று நான் உங்களிடம் கேட்டால், நீங்கள் கொஞ்சம் யோசிப்பீர்கள். நான் இதற்கு ஒரு நல்ல உதாரணம் சொல்கிறேன். ஜே.கே. ரோலின்ஸ். இவரை இப்படி கூறுவதை விட ஹரி பொட்டர் தொடரின் எழுத்தாசிரியர் என்று சொன்னால் அதிகம் தெரியும். அவர் ஹரி பொட்டர் தொடரை எழுதிய பிறகு, அதை வெளியிட 12 வெளியீட்டாளர்களை அணுகினார். ஒவ்வொரு முறையும் அவள் நிராகரிக்கப்படுகிறாள். ஆனால் அவள் முயற்சியை கைவிடவில்லை. இறுதியாக, உலகப் புகழ்பெற்ற ஹரி பொ லட்டர் தொடர் வெளியிடப்பட்டது. பன்னிரெண்டு முறை நிராகரிக்கப்பட்ட பிறகும், அந்த முயற்சியை அவர் கைவிடாததால், இன்று எமக்கு வாசித்து அனுபவிக்க ஒரு அழகான தொடர் எஞ்சியிருக்கிறது, ஜே.கே. ரோலின்ஸ் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராகிவிட்டார்.

சில நேரங்களில் நேர்காணலில் இருந்து நீங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். இன்னும் சில நேரங்களில் நீங்கள் பணியிடத்தில் யாரோ ஒருவரால் நிராகரிக்கப்படுவீர்கள். அல்லது யாரோ ஒருவர் ஒரு உறவில் உங்களை நிராகரித்து இருக்கலாம். அந்த நேரத்தில் நீங்கள் மன அழுத்தத்தில் இருந்திருக்க கூடும், ஆனால் நிராகரிப்பதற்கான காரணம் நமது பலவீனமாக இருக்கலாம். அல்லது அது நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரண காரியமாக இருக்கலாம்.

இருப்பினும், நிராகரிப்பின் மூலம் நம் வாழ்க்கையை நாம் கட்டியெழுப்ப முடியும். நிராகரிப்புகள் நம் வாழ்வில் இன்னும் எவ்வளவு வலு சேர்க்க வேண்டும் என்று நமக்கு கற்றுத்தருகிறது மற்றும் நமது பலவீனங்களை எவ்வாறு சரிசெய்வது என்பதையும் கற்றுக்கொடுக்கிறது. எனவே, நிராகரிப்பு என்பது எம்மை வாழ்வில் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரு நல்ல சக்திவாய்ந்த ஏணியாகும். அந்த உறுதியான ஏணியில் பயப்படாமல் ஏறுங்கள். உங்கள் வாழ்க்கையின் அழகிய நாட்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும்.”

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *