பன்முகத்தன்மையுடன் மகத்தான சாதனைகளை படைத்து தனது நற்பெயரை பரப்பி வரும் பிரண்டிக்ஸ் கொக்கலை நிறுவனம் குறித்த தகவல்களை இம்முறை வியமன் TV யின் “ஒரு நிறுவனத்தின் கதை” மூலம் உங்களுக்கு கொண்டு வருகிறோம்.
2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் Brandix Essentials எனப் பெயர் மாற்றப்பட்டது, பிரண்டிக்ஸ் கொக்கலை என்பது நாளுக்கு நாள் புத்தாக்கங்களுடன் வளர்ச்சியடைந்து ஒரு நிறுவனமாகும். 450 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 1500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 80% க்கும் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தை கொண்ட இந் நிறுவனத்தில் 30 க்கும் மேற்பட்ட விஷேட தேவைகள் உள்ள உறுப்பினர்களும் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
2020 ஆம் ஆண்டு காதுகேளாதோர் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களில் மூவர் பிரண்டிக்ஸ் கொக்கலை நிறுவனத்தின் அங்கத்தவர்கள் என்பது விசேட அம்சமாகும்.
பசுமை நிலைபேரான்மயின் மூலம் பூமித்தாயை விழித்தெழ வைக்கும் பிரண்டிக்ஸ் கொக்கலை நிறுவனம் 2011 ஆம் ஆண்டில், லீட் தங்க விருதினையும் வென்றது. மனித குலத்திற்கும் பூமிக்கும் தனது கடமைகளை நிறைவேற்றும் அதே வேளையில் உலகிற்கு விழித்தெழுந்த தீர்வுகளை வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் பிரண்டிக்ஸ் கொக்கலை நிறுவனம் பிராண்டிக்ஸின் பெயரை மேலும் பிரகாசிக்கத் தயாராக உள்ளது.