இந்துக்களின் சந்திர நாட்காட்டியின்படி, அவர்களின் புத்தாண்டு தீபாவளி நன்நாளில் ஆரம்பமாகிறது. தீபாவளி நாள் இருளை நீக்கி ஒளி கிடைப்பதை குறிக்கிறது. வாழ்வில் ஆன்மீக முன்னேற்றத்திற்காக இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணத்தை கொண்டாடும் வைபவமக தீபாவளியை இந்துக்கள் புதிய தீபங்களை ஏற்றி கொண்டாடுகின்றனர்.
பல்வேறு கலாச்சார கூறுகளால் அலங்கார வைபவமாக உருவான தீபாவளி பண்டிகை, இந்துக்களின் பண்டிகைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தீபாவளி நாள் குறித்து பல கருத்துக்கள் உள்ளன. இந்துக்களுக்கே உரிய பல்வேறு அம்சங்கள் , உணவுகள், கோலங்கள் போன்றவற்றால் வண்ணமயமான இத் தினம் லட்சுமி தேவியின் பிறந்த நாள் என்று ஒரு கருத்து உள்ளது, அதுமட்டுமின்றி, சமண சமயத்தை நிறுவியவர் ஆன்மீக நிலையை அடைந்த நாள் தீபாவளி என்பது மற்றொரு கருத்து. நரகாசுரனை விஷ்ணு வதம் செய்த நாளே தீபாவளி என்றும் ஒரு கருத்து உண்டு.
தீபாவளி நாள் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், தீபாவளி நாளின் மூலம் மனித சமூகத்திற்கு பல செய்திகள் அனுப்பப்படுகின்றன. தீபாவளி என்பது வாழ்க்கையில் புதிய தொடக்கங்களின் நாளாக அறியப்படுகிறது. இது தவிர, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது, கெட்டதை நீக்குவது, நல்லதை வாழ்வில் நெருங்குவது போன்ற குணங்களும் தீபாவளி பண்டிகையின் மூலம் வாழ்க்கையில் சேர்க்கப்படுகின்றன.