சிறப்பான உற்பத்திக்கு பிரண்டிக்ஸ் பினிஷின்

நாட்டின் பொருளாதாரத்திற்கு பலமாக விளங்கும் பிரண்டிக்ஸ் குழுமத்தின் மற்றுமொரு விசேட நிறுவனம் பற்றிய தகவல்களை வியமன் TVயின் ‘ஆயதனயக்க கதாவக்’/”ஒரு நிறுவனத்தின் கதை” நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்கு கொண்டுவருவது, பிராண்டிக்ஸ் ஃபினிஷிங் நிறுவனத்தைப் பற்றி தகவல்களாகும்.

240 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இந்த நிறுவனத்தில் கடமையாற்றுகின்ற அதேவேளையில் 24 மணி நேர ஷிப்டுடன் இணைக்கப்பட்ட பகல் மற்றும் இரவு ஷிப்ட் முறையின்படி நடத்தப்படும் இந்த நிறுவனம் 1993 இல் ஆரம்பிக்கப்பட்டது. வணிக நடவடிக்கைகளின் விரிவாக்கத்துடன், இது 2002 இல் பிரண்டிக்ஸ் ஃபினிஷின் நிறுவனம் என்று பெயரிடப்பட்டது மற்றும் பிராண்டிக்ஸ் குழுமத்தின் இருக்கும்  ஒரே சலவை பிரிவு இதுவாகும். நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைக் கொண்ட நிறுவனத்தில் மாதிரி சலவை பிரிவு மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், “ரசதிய மங்கள்ய” விழாவின் நடனப் பிரிவில் வெற்றிக்கின்னத்தை பிரண்டிக்ஸ் ஃபினிஷின் நிறுவனம் வென்றது.

வாடிக்கையாளருக்கு உயர்தர தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, பிரண்டிக்ஸ் ஃபினிஷின் நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வடிவமைப்பை உலகிற்கு வழங்க முயற்சிக்கும் ஒரு நிறுவனமாகும்.

இந்த அனைத்து நடவடிக்கைகளிலும், இடையிலும் நிறுவனத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலை எப்போதும் நேசிக்கும் பிரண்டிக்ஸ் குழுமம், சாத்தியமான எல்லா வழிகளிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விஷயங்களைச் செய்யச் செயல்படுகிறது.