நான்கு ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட விழித்தெழுந்த மக்களைப் கடமையாற்றும் பிரண்டிக்ஸ் குழும நிறுவனங்களுக்குள் உள்ள உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் எம்முடன் கைகோர்த்து நீண்ட காலமாக எம்முடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இக் குழு உறுப்பினர்களுக்கு, மன அழுத்தமில்லாத பணிச்சூழலை உருவாக்குதல் மற்றும் உறுப்பினர்களின் பணிச்சூழலை மிகவும் பாதுகாப்பானதாக்குவதன் மூலம், அவர்கள் தங்கள் சேவைகளை உயர்ந்த கண்ணியத்துடன் வழங்குவதற்கான சூழலை வழங்கும் கொள்கையின் அடிப்படையில், பிரண்டிக்ஸ் குழுமம் துன்புறுத்தல் மற்றும் வன்முறை இல்லாத பணியிடத்தை உருவாக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. .
துன்புறுத்தல் மற்றும் வன்முறை இல்லாத பணியிடம் என்றால் என்ன?
பிரண்டிக்ஸில் பணிபுரியும் உறுப்பினர் சகலருக்கும் துன்புறுத்தல், துஸ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குதல் இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். எங்கள் உறுப்பினர்களுக்கு உள மற்றும் உடல் அழுத்தத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நடத்தையையும், பணியிடத்தில் உள்ள எந்தவொரு நபரிடமிருந்தும் பாகுபாடு அல்லது அவமதிப்பு, நிறுவன சூழலுக்கு அப்பால் நடக்கக்கூடிய எந்தவிதமான ஆன்லைன் மூலமான துன்புறுத்தல், பணியிடத்தில் அல்லது பணியித்தை தொடர்புடைய இடங்களில் வாய்மொழி மூலம் அல்லது உடல்ரீதியான பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றை தடுப்பதன் ஊடாக பிரண்டிக்ஸ் நிறுவனங்களுக்குள் இடம்பெறக்கூடிய வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
நீங்கள் மற்றவர்களுக்கு மதிப்பளிப்பதில் கவனம் செலுத்தி நான்கு ஒழுக்க விழுமியங்களுடன் தொழில் வாழ்க்கையை மேற்கொள்ள முயற்சிக்கும் ஊழியராக இருந்தால், மேற்கூறிய துன்புறுத்தல், துன்புறுத்தல் அல்லது பாலியல் வன்முறையை நீங்கள் அனுபவித்தால், அல்லது அத்தகைய சம்பவம் பற்றி உங்களுக்குத் தெரிய வந்தால் அதனை சிறிய விடயமாக எண்ணி புறக்கணிக்க வேண்டாம். ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு கிளஸ்டரிலும் அமைக்கப்பட்டுள்ள உள்ளக கமிட்டியிடம் இதுபற்றி புகார் செய்யுங்கள். அதன் மூலம், உங்களுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
மேலும், ஒரு நபர் அனுபவிக்க விரும்பாத ஒரு சம்பவத்தின் / செயல் மூலம் எங்கள் உறுப்பினர்கள் சிரமப்படுவதை, மன அழுத்தத்திற்கு உட்படுவதை தடுக்கவும், எங்கள் உறுப்பினர்களின் தொழில்முறை கண்ணியத்தைப் பற்றி எப்போதும் சிந்திக்கும் நாம், பெருமைமிக்க பிரண்டிக்ஸ் உறுப்பினராக முன்னேற துன்புறுத்தல் மற்றும் வன்முறை இல்லாத பணியிடத்தை உருவாக்க இந்த கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளோம். எனவே, நாம் இது தொடர்பான மேலதில விளக்கத்தை பெற்று, வன்முறை மற்றும் அழுத்தம் இல்லாத பணியிடத்தை உருவாக்கும் பொறுப்பிற்கு பங்களிப்போம்.