2023னை கவனமாக தொடருவோம்

நாம் பிறந்த நாள் முதல் இன்று வரை நம் வாழ்க்கைப் பயணத்தில் பல பாதைகளில் பயணித்து இருக்கின்றோம். நீங்களே சிந்தித்து பார்த்திர்கள் என்றால், நாம் சரியான பாதையிலும், சில நேரங்களில் தவறான பாதையிலும் சென்றிருக்கிறோம் என்பது உங்களுக்கு புரியும். வாழ்க்கையில் சரியானதை கற்றறிந்து சரியான பாதையில் செல்லவும், தவறான பாதையில் செல்கிறோம் என்பதை உணரும்போது, ​​கிடைக்கும் அனுபவங்களால் பாதையினை மாற்றவும் முனைகிறோம். “விழித்தெழுந்த வாழ்வு” நிகழ்ச்சித்திட்டத்தில் பிரண்டிக்ஸ் வத்துப்பிட்டிவல சிரேஷ்ட  மனநல ஆலோசகர் நதீரா பிரஷாஞ்சனி இந்த வருட பயணத்தை நாம் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய வழி பற்றி கூறுகிறார்.

“ஒரு புதிய வருடத்தில், ஒரு புதிய மாதத்தில் வாழ்க்கையை ஒரு புதிய வழியில் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நீங்கள் எவ்வளவு தன்நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? நாம் எப்போதும் நம் திறன்கள் மற்றும் திறமைகளை நம்புகிறோமா? நம் திறமைகள் மற்றும் திறன்களை நம்பினால், நம்மால் செய்ய முடியாது என்று நாம்  அடிக்கடி நினைக்கும் விஷயங்களைச் செய்து முடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

அதேபோல, சில நபர்களையும், சில விஷயங்களையும் மிகவும் ஜாக்கிரதையாக நம்பி, மற்றவர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் பாதுகாக்கவும் முடிந்தால், மனவேதனைகளும் ஏமாற்றங்களும் நம் வாழ்வில் இருந்து மறைந்துவிடும் என்று நினைக்கிறேன்.

இந்த புதிய ஆண்டில், புதிய மாதத்தில், வாழ்க்கையைப் புதிய கோணத்தில் பார்க்க முடிந்தால், சில விஷயங்களை நமக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து, மனவேதனையைக் குறைக்கலாம்.

இதை பற்றி சொல்லும் போது திருமதி தீபிகா பிரியதர்ஷனி அவர்கள் பாடிய “நங்கியே மொகத” பாடலின் அருமையான வரிகள் நினைவுக்கு வருகிறது. அந்த பாடலில் இவ்வாறு கூறுகிறது:

சாலை நன்றாக இருந்தால்
பார்வையும்  நன்றாக தெரிந்தால்
கவனமாக அடியெடுத்து வையுங்கள்
தவறான பாதையில் செல்லாமல்

வாழ்க்கையில் தோல்விகளும் தடைகளும் வரலாம். ஆனால் எங்களுக்கு ஒரு அற்புதமான  வாழ்க்கை பாதை உள்ளது. புத்திசாதுரியமாக அந்த வழியைக் கண்டுபிடியுங்கள்.”