நாம் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்வதற்கு மொழி மிகவும் முக்கியமானது. எமது தாய்மொழியைப் போலவே பிற மொழிகளையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன உலகில் நாம் முன்னேறுவதற்கு ஆங்கில மொழி மிகவும் முக்கியமானது. அநேகமானவர்கள் மிகவும் கடினம் என்று சொல்லும் ஆங்கில மொழியினை எளிதாகவும் நடைமுறை ரீதியாகவும் கற்க ஒரு ஆங்கில மொழி பயிற்சி வகுப்பை பிரண்டிக்ஸ் நிவித்திகல நிறுவனம் ஏற்பாடு செய்தது.
2023 ஆம் ஆண்டின் பணியாளர் மதிப்பீட்டின்படி நடத்தப்படும் ONE ON ONE அமர்வுகளில் வழங்கப்படும் பயிற்சித் தேவைகளுக்கு ஏற்ப ஊழியர்களின் ஆங்கில மொழி அறிவை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்தப் பாடநெறி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தின் மூலம் அடிப்படை இலக்கணம், சொல்லகராதி பயிற்சி மற்றும் எழுதும் திறனை மேம்படுத்துதல் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. நிறுவனத்தின் உதவி முகாமையாளர் திரு. கபில ஹேவகே இந்தப் பாடநெறிக்கு தேவையான வளங்களை வழங்கினார்.
இந்த மூன்று மாத பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஊழியர்களுக்கு முன் மற்றும் பின் மதிப்பீடுகளை நடத்துவதன் மூலம் தரமான ஆங்கில மொழி பாடத்திட்டத்தை வழங்குவது பிராண்டிக்ஸ் நிவிதிகல நிறுவனத்தின் நோக்கம் ஆகும். இம் மொழியினை கற்றுக்கொள்ளும் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் இது மிகவும் மதிப்புமிக்க வாய்ப்பாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.