நட்புடன் பாசத்தால் வெற்றிகாணும் அவள்...

நிவித்திகல பிரண்டிக்ஸில் தனது குழுவின் திறமைகளையும் திறன்களையும் திறமையாக நிர்வகிப்பவர் ஜெயலலிதா குமாரி. நிவித்திகல நிறுவனத்தில் அனைவரின் இதயங்களையும் தனது அன்பினால் வென்று, நட்புரீதியான நடத்தையுடன் பணிபுரிகிறார்.

2016 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் சிறந்த உறுப்பினருக்கான விருதைப் பெற்ற ஜெயலலிதா, தனது பணியை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்து வருபவராவார், அவர் எங்கள் நிறுவனத்திற்கு உண்மையிலேயே ஒரு பெறுமதியான சொத்தாக திகழ்கிறார். தனது வாழ்நாளில் 18 ஆண்டுகள் எங்களுடன் செலவழித்து அனைவரின் இதயங்களையும் வென்ற ஜெயலலிதா குமாரி, ஒரு அனுபவமற்ற இயந்திர ஆபரேட்டரிலிருந்து தயாரிப்பு மேற்பார்வையாளர் மற்றும் பல குழுக்களின் தலைவராக, உண்மையிலேயே ஒரு அழகான வெற்றிப்பாதையில் இன்றுவரை பயணித்து வருகின்றார்.

Facebook
Facebook