உங்களுக்குத் தெரியாத ஒன்று!

உங்களை மதிக்கும் மற்றும் நீங்கள் மதிக்கும் விடயங்கள் நீங்கள் இறக்கும் வரை உங்களுடன் இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா.  கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் அதிகமாக நேசிக்கும் உங்கள் அன்பான உறவினரையோ, நண்பரையோ நீண்ட காலமாக சந்திக்காமல் விட்டீர்கள் என்று. ஆனால் ஏதாவது சில காரணங்களால் நீங்கள் நிச்சயமாக அவர்களை மீண்டும் சந்திப்பீர்கள். தெருவில் அல்லது எங்காவது ஓர் இடத்தில் தற்செயலாகப் பார்த்தால் ஆச்சரியப்பட வேண்டாம். அதுதான் பிரபஞ்சத்தின் விதி. உங்களுடன் ஒத்துப்போகாத மற்றும் நீங்கள் மீண்டும் சந்திக்கக் கூடாத நபர்கள் உங்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள், மேலும் நீங்கள் அதிகமாக விரும்புபவர்கள் உங்களிடம் நெருக்கமாக்கப்படுகிறார்கள், ஏனெனில் நீங்கள் பார்க்கவோ கேட்கவோ முடியாத விஷயங்களை பிரபஞ்சம் செவிமடுக்கிறது, மேலும் அதனால் பார்க்க முடிகின்றமையினால் ஆகும். எனவே வேண்டும் என்று மனத்தால் துன்பப்பட்டவர்களை உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒருபோதும் சந்திக்க மாட்டீர்கள். அதுதான் இயற்கை மற்றும் பிரபஞ்சத்தின் விதி. உங்கள் வாழ்க்கையினை பாழாக்கிப் போனவர்களை நினைத்து வருத்தப்படாமல் நீங்கள், உங்கள் வழியில் செல்லுங்கள். நிச்சயமாக ஒரு நாள் நீங்கள் உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து உங்களைப் பற்றி பெருமைப்படுவீர்கள். அதேபோல, வாகனம் அல்லது எதிரார்க்கின்ற வேலை போன்ற மதிப்புமிக்க ஏதாவது ஒன்றை நீங்கள் பெற விரும்பினால், அதற்கான செயல்களை தொடர்ந்து செய்யுங்கள். அதைப் பற்றி கனவு காணுங்கள், கிடைக்கும் என்று நம்புங்கள். விரைவாக இல்லாவிட்டாலும், நீங்கள் அதை சரியான நேரத்தில் பெறுவீர்கள்.

அதுமட்டுமல்ல, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், நீங்கள் தனியாக செயல்பட வேண்டும், வாழ்க்கையினை வாழ்வதற்கு போலவே விநோதமடையவும் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் நிச்சயமாக ஒருநாள் நீங்கள் தனிமைப்பட நேரிடும். எல்லோரும் பக்கத்தில் இல்லாவிட்டாலும் உங்களால் தனிமையாக வாழ முடியும் என்ற வகையில் வாழுங்கள். அதுவே உங்களை வாழ்க்கையில் எப்போதும் வலிமையாக்கும். எனவே இந்த விஷயங்களை நன்றாக மனதில் கொண்டு வாழ்க்கையில் முன்னோக்கி செல்லுங்கள், நீங்கள் ஒருபோதும் தவறான வழியில் செல்ல மாட்டீர்கள், உங்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.