21 ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் யுகத்தில் வாழும் எமக்கு இப்போது அதி உயர் தொழில்நுட்பத்தை கையாள நேரிட்டுள்ளது. வேகமாக நவீனமயமாகி வரும் இந்த உலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக நாம் எதிர்கொள்ள நேரிடும் சிரமங்கள் ஏராளமாக உள்ளன. உலகம் முழுவதும் சமூக ஊடக ஹேக்குகள், இணையதள செயலிழப்புகள், சைபர் தாக்குதல்கள் போன்ற இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நாம் அனுபவிக்க நேரிடும் அம்சங்களாக உள்ளன. Whats app எனப்படும் சமூக ஊடகம் உலகின் பல நாடுகளில் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான ஊடக செயலியாகும். இப்போது Whats app செயலியும் ஹேக் செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இன்றைய கட்டுரையில் Whats app-க்கு என்ன நேர்ந்தது, அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்போம்.
எமக்கு தெரியாத எண்களிலிருந்து வரும் (Link) இணைப்புகளை அணுகுவதன் மூலம் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து பெரும்பாலும் வருகிறது. இதன் மூலம் ஹேக்கர்கள் மற்றவர்களின் தொலைபேசி எண்களை நமது வாட்ஸ்அப்பில் பெற முடியும். அவற்றைப் பயன்படுத்தி, நம் அன்புக்குரியவர்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கித் தகவல்கள் மட்டுமின்றி, உங்கள் பெயரில் உள்ள பணத்தைக் கூட பெற்றுக்கொள்ளும் திறன் அவர்களுக்கு உள்ளது. இது போன்று நடக்கும் முன், நமக்குத் தெரியாத வாட்ஸ்அப் குழுக்களில் சேராமல் இருத்தல், எங்களுக்கு நன்கு தெரிந்த ஒருவர் அனுப்பிய இணைப்புகளில் (Link) இருந்து இணையதளங்களை அணுகுவதற்கு முன் இருமுறை சிந்தித்து சரி பார்த்தல், உங்கள் வங்கிக் கணக்கு எண்கள், OTP அல்லது உங்கள் கணினியில் வரும் ரகசியக் குறியீடுகளை, உங்கள் கடவுச்சொற்களை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம், இந்த Whats app ஹேக் ஆகும் அபாயத்திலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். இதுமட்டுமல்லாமல், பண உதவிகள், குலுக்கல் போன்ற செய்திகள் சில காலமாக நடந்து வரும் ஆபத்தான ஹேக் முறைகளாகும், இவை பெரும்பாலும் பொய்யானவையாக உள்ளன. நீங்கள் பதிலளிக்கும் முன் அவற்றை கவனமாக ஆராய வேண்டும். Whats app கணக்கு அபாய எச்சரிக்கை வரும் முன் இந்த விஷயங்களை சிறப்பாக கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமான விடயமாகும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பது எங்கள் பொறுப்பு என பிரண்டிக்ஸ் நாம் கருதுகிறோம். இந்த விஷயங்களைப் பற்றி இன்னும் கவனமாக சிந்திக்க வேண்டியது உங்கள் பொறுப்பு ஆகும்.