நாயகிகள் இருப்பதும், நாயகிகள் உருவாகுவதும் நம் மத்தியில் இருந்து தான். தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் புதிய திசைகளை கண்டறிந்து, தைரியமாக வாழ்க்கையை வெல்லும் பெண்கள் உண்மையான கதாநாயகிகள் ஆவர். பிரண்டிக்ஸ் குழுமத்தில் இதுபோன்ற பல கதாநாயகிகள் உள்ளனர். இம்முறை மகளிர் தினத்திற்கான எமது கருப்புறுளாகிய Powerd by Inspiration மூலம் எங்கள் ஆயிரக்கணக்கான நாயகிகளை கொண்டாட நினைத்தோம்.
பிரண்டிக்ஸில், எங்கள் ஊழியர்களில் 80% பெண்கள் ஆவர். அவர்கள் தையல், பின்னல் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் மட்டும் இல்லை. கவிதை, பாடல், நடனம், அறிவிப்பு போன்றவற்றில் திறமையை வெளிப்படுத்தும் பெண்கள் மற்றும் எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் எதிர்கொண்டு உறுதியுடன் வெற்றி பெறும் பெண்கள் உட்பட பலதரப்பட்ட திறன்களைக் கொண்ட பெண்கள் பிரண்டிக்ஸ் குழுமத்தில் பணிபுரிகின்றனர். இவர்களின் இந்த சிறப்பான செயல்பாடுகள் தான் பிரண்டிக்ஸ் நாம் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஒரு பெண் என்ற வகையில் பணியிடத்தில் ஒரு துறையில் மட்டும் ஒதுங்கி இருப்பது ஒரு காரணமல்ல என்பதை நிரூபிப்பதன் மூலம் அவர்கள் தங்களால் இயன்றவரை தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்கிறார்கள். அதனால்தான் திறமையான பெண் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இயந்திர ஆபரேட்டர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் எங்கள் நிறுவனங்களில் பெருமையுடன் பணியாற்றுகிறார்கள். மகளாக, சகோதரியாக, காதலியாக, மனைவியாக, அம்மாவாக பல்வேறு கதாபாத்திரங்களில் இயங்கி வரும் அவள், தைரியம் மற்றும் பலத்தால் அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்கிறாள்.
சமுதாயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, தம் கரங்களால் உலகைத் விழித்தெழ வைக்கும் அவள் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு அலப்பரியதாகும். தையல் மூலம் உலகை விழித்தெழ வைக்கும் சகோதரிகளே, உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உள்ள தடைகளை எல்லாம் வெற்றிகரமாக கடந்து செல்ல “வியமன்” நாம் மனதார வாழ்த்துகிறோம்!