செய்தொழில் உயர் தொழில்
மூன்று காலம் காட்டும் உற்பத்தி
மூவாறு பந்தி சேர்ந்து உண்ணும்
நித்தமும் உள்ள நிறைகுடம்
கடிகார முட்கள் சுழற்சியிலே
வந்து விழும் பொருட்கள்
அத்தனையும் நாட்டின் வருமானமே
கோடி கோடியாய் பெருகிடுமே
மூலப் பொருட்கள் குவியலையை
ஆளப்பிறந்த தோழர்களே
நீங்கள் செதுக்கிய சிற்பம் தானே
ஆடை உற்பத்தியெனும் பெரும் சித்திரம்
உழைப்பு என்னும் உறுதி மேட்டில்
வடிவு எடுத்த பொருட்களே
உழைப்பு இன்றி ஏதும் இல்லை
களைப்பென்ற சொல்லை அகற்றி விட்டாள்
தாய்நாட்டின் மதிப்பை ஓங்கிடவே
பொருளாதாரம் சிறந்திடவே
ஆடைத் தொழிலின் சூற்பையில் விதைத்திடுவாய்
உயிர் அணுக்கள் ஓர் ஆயிரம்
கூடி நின்று தொழில் வளர்த்தால்
கோடி சாலைகள் ஒழி எழுப்பும்
ஓடி ஆடி அதை விற்றால்
தாய் நாட்டின் வளமை பெறும்…..
விழிகள் உறையும் நேரத்தில்
விடியல் வருவது இல்லை
வீணாக விரையும் பொழுது
விதைகள் முளைப்பதுமில்லை
வினாவாக வாழ்க்கை இருந்தால்
விடையாக நீ இரு…!
K. நிஷாந்தனி குமாரி
பிராண்டிக்ஸ் அவிசாவளை நிறுவனம்